முக்கால் மணி நேரத்தை டாய்லெட்டில் செலவு செய்ய வைக்கும் மூல நோய்க்கு முன்னோர் வைத்தியம்

 
piles

மூலநோய் என்பது நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. உட்புற மூலம் ஆகும். இது குத கால்வாய் பகுதியின் ஆழத்தில் உண்டாவதால் இதை பார்க்க முடியாது. பெரும்பாலும் இவை தானாகவே மறைந்துவிடக்கூடும். இது மலம் கழிக்கும் போது எரிச்சலை உண்டாக்கலாம். இரட்தக்கசிவு ஏற்படலாம். வலி அசெளகரியம் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

இரண்டாவது நீடித்த மூல நோய். இது மலவாய் பகுதியில் வீக்கம் மற்றும் மலவாய் ஒட்டிக்கொள்ளுதல் போன்ற பிரச்சனைகள் உண்டாக்கலாம். மலவாய் ஒட்டிக்கொள்ளுதலுக்கேற்ப மருத்துவர் மூல நோய் தீவிரத்தை முடிவு செய்வார்.

மூன்றாவது உடலில் இருந்து மலம் வெளியேறும் இடமான மலவாய் பகுதியில் உண்டாகும் மூலம். இது வெளி மூலம் என்றழைக்கப்படுகிறது. சில நேரங்களில் மலவாய் பகுதியில் கட்டிகள் உண்டாகலாம். இது உட்காரும் போது உடல் செயல்பாடுகள் அதிகரிக்கு போது அசெளகரியத்தை உண்டாக்கலாம்.

த்ரோம்போஸ்ட் மூல நோய் என்பது உடல் திசுவில் இரத்த கட்டை கொண்டிருக்கும். அதீத வலி, வீக்கம், மூலம் ஏற்பட்ட இடத்தை சுற்றி இரத்தம் கட்டிய நிறம் என்று இருக்கும்

முள்ளங்கி ஜூஸ் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிப்பது பைல்ஸ் பிரச்சனைக்கு ஒரு பொதுவான தீர்வு ஆகும். தொடக்கத்தில் 1/4 டம்ளர் என தொடங்கி, படிப்படியாக அதை அரை டம்ளர் ஒரு டம்ளர், என கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்கவும்.

மூன்று அல்லது நான்கு உலர்ந்த அத்திப் பழங்களை முதல் நாள் இரவில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அத்திப்பழம் ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை என சாப்பிடுங்கள்.

மாதுளம்பழத்தின் தோலை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை வெதுவெதுப்பாகவோ அல்லது குளிர வைத்தோ, ஒரு நாளைக்கு இரண்டு முறை வடிகட்டி குடிக்கவும்.

பைல்ஸ் பிரச்சனையால் ஏற்படும் வலியைக் குறைக்க, கல் உப்பு, இஞ்சி மற்றும் மிளகுத்தூள் சேர்க்கப்பட்ட மோர் குடிக்கவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.

உலர்ந்த மாம்பழக் கொட்டைகளைப் பொடி செய்து கொள்ளுங்கள். இரண்டு டீஸ்பூன் இந்த பொடியுடன் சிறிது தேன் கலந்து தினமும் இருவேளை சாப்பிடவும்.

ஒரு டீஸ்பூன் இஞ்சி, எலுமிச்சை சாறு, புதினா இலைகள் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை சாப்பிடுங்கள்.

சிறிய துண்டு பாகற்காயை நன்கு அரைத்து'அதன் சாறினை எடுத்துக் கொள்ளவும். இதை சிறிது மோருடன் கலந்து தினமும் காலையில் குடிக்க வேண்டும்.

மஞ்சள், கிருமி நாசினிகள் மற்றும் குணப்படுத்தும் பல பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, மஞ்சள் கிழங்கை அரைத்து ஒரு டீஸ்பூன் சாப்பிடுங்கள்.

ஒரு கைப்பிடியளவு எள் எடுத்து, அதை 500 மில்லி தண்ணீரில், மூன்றில் ஒரு பங்காகக் குறையும் வரை கொதிக்க வைக்கவும். இதை பேஸ்ட் செய்து ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை சாப்பிட வேண்டும்.

சீரகத்தை அரைத்துப் பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சேர்த்து ஒரு நாளைக்கு ஒரு முறை என குடிக்கவும்