பௌத்திரம் நோய்க்கான இயற்கை வைத்தியம்

 
piles

பொதுவாக அதிகம் நீரை அருந்தாமையும் ,உடல் சூடும் ,மற்றும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்போருக்கும் இந்த மூலம் என்ற பவுத்திர நோய் தாக்குகிறது .இந்த பவுத்திர நோயால் பலர் சரியாக மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவர் .இந்த நோய்க்கான இயற்கை வைத்தியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.பொதுவாக பௌத்திரம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. 
2.மேல் பக்கப் பௌத்திரம், கீழ்ப்பக்கம் பௌத்திரத்திரம் என்பனவே அவை இரண்டும் ஆகும்.
3.மேல் பக்க பௌத்திரமானது குணமாவது கடினம். 
4.கீழ்ப்பக்கம் பௌத்திரத்தில் துர்நாற்றத்துடன் கூடிய கசிவானது சொட்டு சொட்டாக இறங்கும்.
5.பௌத்திரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இருவேளை தேங்காய் பால் சாப்பிடலாம் 
6.இந்த கீழ்ப்பக்கம் பௌத்திரத்திரத்திற்கு கொப்பரைத் தேங்காய் எவ்வளவு சாப்பிட முடியுமோ அவ்ளோ சாப்பிடலாம். 
7.இந்த கீழ்ப்பக்கம் பௌத்திரத்திரத்திற்கு ஆகாயத் தாமரை இலையை அரைத்து அந்த இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
8.அதிகப்படியான உடல் சூடே பௌத்திரம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது .
9. எனவே இந்த உடலில் உண்டாகும் உடற் சூட்டைத் தணிக்க எண்ணெய் குளியல் எடுக்கலாம் , 
10..இந்த கீழ்ப்பக்கம் பௌத்திரத்திரத்திற்கு உணவில் நீர்க் காய்கறிகலான தக்காளி, வெள்ளரிக்காய், தர்ப்பூசணி அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.