ஜீரகத்துடன் வாழைப்பழம் பிசைந்து தின்றால் எந்த நோய் விலகும் தெரியுமா ?
பொதுவாக சீரகம் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் ஆற்றல் கொண்டது .உதாரணமாக அஜீரண பிரச்னை இருப்பவர்கள் ஜீரகத்தை வறுத்து சுடுநீரில் போட்டு பால் கலந்து சாப்பிட அஜீரண பிரச்னை தீர்ந்து பசி கூடும்.இப்படி சீரகத்தின் மூலம் குணமாகும் பல்வேறு நோய்கள் பற்றி இந்த பதிவில் பாக்கலாம்
1.சிலருக்கு ரத்தமூலம் இருக்கும் .இப்படி இருப்பவர்கள் ஜீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலையில் வெறும்வயிற்றில் பிசைந்து சாப்பிட்டு வர ரத்த மூலம் விரைவில் குணமாகும்.
2.சிலருக்கு வயிற்றுவலி இருக்கும் .இப்படி இருப்பவர்கள் ஜீரகத்துடன் சேர்த்து உப்பையும் கலந்து மென்று தின்று தண்ணீர் குடித்து வர வயிற்றுவலி உடனே தீரும்
3.சிலருக்கு இருமல் இருக்கும் ,இப்படி உள்ள நபர்கள் ஜீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் விரைவில் குணமாகும்.
4.சிலருக்கு நிற்காமல் விக்கல் இருக்கும் .இப்படி விக்கல் எடுப்பவர்கள் ஜீரகப்பொடியுடன் தேன் கலந்து சாப்பிடும் பொழுது விக்கல் உடனடியாக நிற்கும்.
5.சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் அப்படிப்பட்டவர்கள் ஜீரகத்தை அரைத்து உடலில் பூசி வர உடலில் ஏற்படும் அரிப்பு நிற்கும்.
6.சிலருக்கு செரிமான பிரச்னை இருக்கும் ,அதனுடன் வயிற்றுவலி இருப்பவர்கள் ஜீரகத்தை மென்று தின்று வர வயிற்றுவலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.
7.சிலருக்கு பித்தம் அதிகம் இருக்கும் ,இப்படி இருப்பவர்கள் ஜீரகப்பொடியுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து நன்றாக குழைத்து சாப்பிட்டு வர பித்தம் அகலும்.
8.அதுபோல் நல்லெண்ணெய்யில் ஜீரகத்தை போட்டு காய்ச்சி அந்த எண்ணையை தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.
9.தேள் கொட்டியதால் ஏற்படும் விஷத்தை முறிக்க ஜீரகப்பொடியோடு உப்பு, தேன், நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில பூசினால் தேள் கொட்டியதால் ஏற்பட்ட விஷம் நீங்கும்


