பப்பாளி பழ துண்டுகளை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
papaya

பொதுவாக  மூல நோய்க்கு  முறையற்ற உணவு பழக்கமும் ,முறையற்ற வாழ்க்கை முறையும் இந்த மூல நோய்க்கு முக்கிய காரணம் .இதை எப்படி தடுக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.ஆசன வாய்  உட்புற சதையிலிருந்து மலம் கழிக்கும் போது ரத்தம் கசிந்தால் அது ரத்த மூலம் என வகைப்படுத்தப்பற்றிருக்கிறது.
2.மேலும் இந்த மூலத்தில் அமரும் போதும், மல்லாந்து படுக்கும் போதும் லேசாக வலிக்கும்.

piles
3.அந்த இடத்தில் தொடர்ந்து சிலருக்கு அரிப்பு ஏற்பட்டு , மனதில் ஒரு நிம்மதியற்ற நிலை ஏற்பட்டு ஒரே டார்ச்சராக இருக்கும்
4.முதலில் எவருமே தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாதவாறும் ,கார உணவுகளையும், மாமிச உணவுகளையும் உண்பதை நிறுத்தி விட  வேண்டும்.
5.மேலும் இந்த மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் விளக்கெண்ணையை தடவி வந்தால் இந்த மூல நோய் முற்றாமல் குணப்படுத்தலாம்
6.துத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி, மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் களிம்புபோல் வைத்து கட்டி வந்தாலும் , அருகம் புல் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் இதை குணமாக்கலாம்  ,
7.பப்பாளி பழ துண்டுகளை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தாலும் இந்த மூல நோய் குணமாகி விடும்