சுடு நீரில் வறுத்த பெருஞ்சீரகத்தை சேர்த்து குடிச்சா எந்த நோய் ஓடிபோகும் தெரியுமா ?

 
sombu

நமது பாரம்பரிய சமையல் முறையில் பல உணவு பொருட்கள் வாசனைக்காகவும் ,நம் உடல் ஆரோக்கியத்துக்காகவும் சமையலில் சேர்க்கப்படுகிறது ,இந்த வரிசையில் பெருஞ்சீரகத்துக்கென்று

தனி சிறப்புண்டு .அந்த இன்று இந்த பதிவில் இந்த சோம்பு மூலம் குணமாகும் நோய்களையும் ,அது தடுக்கும் நோய்களையும் பற்றி பார்க்கலாம் .

sombu

1.மலச்சிக்கல் இருந்தால், ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள நீரில் ஒரு டீஸ்பூன் வறுத்து பொடித்த பெருஞ்சீரகத்தை கலந்து கொள்ளுதல். செரிமான செயல்முறையை மேம்படுத்தும்.

2.நெஞ்செரிச்சல் ,வாயு தொல்லை ,வயிறு உப்பிசம் போன்ற பிரச்சினைகளுக்கு சோம்பினை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடிக்கலாம்

3.சில நேரங்களில் பருவ நிலை மாற்றத்தால் சில ஆஸ்த்மா நோயாளிகளுக்கு மூச்சு திணறல் உண்டாகும் .அப்டி பட்டோர் கொஞ்சம் சோம்பை எடுத்து தின்று விட்டு ,வெந்நீர் கொஞ்சம் குடிக்க குணமாகும் .

4.மேலும் இந்த பெருஞ்சீரகம் மூலம் இரைப்பை பிரச்னை, மாதவிடாய்க்கோளாறு, செரிமானக் கோளாறுகள், வயிற்றில் உள்ள ஒட்டுண்ணி பிரச்சனை, பெருங்குடல் கோளாறுகள் போன்ற நோய்கள் குணமாகும் .