பெருஞ்சீரக தேநீர் மூலம் நம் உடல் பெரும் நன்மைகள்

 
perunjeeragam

பெரும்பாலான ஹோட்டல் மற்றும் வீடுகளில் சாப்பிட்டதும் நம் செரிமானத்துக்கு கொடுக்கப்படும் பெருஞ்சீரக விதையில் ஏராளமான ஆரோக்கிய நண்மைகள் அடங்கியுள்ளது .பெருஞ்சீரகத்தில் அதிக அளவு நார் சத்து இருப்பதால் இது நமக்கு ஏற்படும் டயரியா போன்ற வயிற்று கோளாறுகளை நிவர்த்தி செய்யும் .மேலும் வயிற்றில் உண்டாகும் தேவையற்ற வாயு கோலாறுகளை சரி செய்யும் .தினம் ஒரு கப் பெருஞ்சீரக டீ குடித்து வந்தால் இது நம் உடலில் நீர் தேங்காமல் காப்பாற்றி ,சிறுநீரக பாதையை சரி செய்யும் .நம் உடலில் உண்டாகும் ரத்த அழுத்தம் மற்றும் இதய கோளாறுகளை இதில் உள்ள பொட்டாசியம் சரி செய்கிறது .மேலும் இதன் மூலம் உண்டாகும் நன்மைகளை பார்க்கலாம்

1.தினமும் சிறிதளவு பெருஞ்சீரக விதைகளை மென்று சாப்பிடுவது உமிழ்நீரில் நைட்ரைட் உள்ளடக்கத்தை (nitrite content) அதிகரிக்க உதவுகிறது,

பார்வையை அதிகரிக்க பண்டை கால ...

2.

பெருஞ்சீரக விதைகளில் இருக்கும் சக்திவாய்ந்த ஆன்டி ஏஜிங் பண்புகள் சரும சுருக்கங்களை கட்டுக்குள் வைக்க உதவும். மேலும்  ஆரோக்கியமான தோல் செல்களில் இருந்து ஆக்ஸிஜனை வெளிபடுத்த உதவும்.

3.

பெருஞ்சீரக விதைகள்  தோல், வயிறு மற்றும் மார்பகங்களை பல்வேறு புற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் ஃப்ரீ ரேடிக்கல் பண்புகள் கொண்டவையாகும்.

4. நம்முடைய தினசரி உணவில் பெருஞ்சீரக விதைகளைச் சேர்த்து வருவது ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தலுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கும்.