மாத விடாய் ஒழுங்காக வர இதை அலட்சியப்படுத்தாதிங்க பெண்களே
பொதுவாக இன்றைய நாகரீக உலகில் பல பெண்களும் மாதவிடாய் பிரச்சினையால் அவதி படுகின்றனர் .இதற்கு காரணமாக இருப்பது மாறிவிட்ட வாழ்க்கை முறையும் உணவுப்பழக்கமும் தான் .இந்த மாதவிடாய் அதிகமாக வந்தாலும் ,குறைவாக வந்தாலும் சிக்கல்தான் இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.ஒரு பெண்ணுக்கு திடீரென்று உடல் எடை அதிகரித்து விட்டால், அது மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும்.
2.ஆகவெ ஒழுங்கான மாதவிடாய் சூழற்சிஏற்பட முதலில் உடல் எடையை குறைத்துக்கொள்ள வேண்டும்.
3.சில பெண்கள் அதிக மன அழுத்தில் இரந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும்.
4.ஆகவே பெண்கள் மாத விடாய் ஒழுங்காக வர மன அழுத்தத்தில் இருந்து விடுப்பட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்.
5.பெண்களுக்கு மாத விடாய் ஒழுங்காக வர சுவாச பயிற்சி, யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
6.பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுகிறீர்கள் என்றால் இது மாதவிடாய் பிரச்சினையை ஏற்படுத்தும் .
7.இதற்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை. தாய்பால் கொடுப்பது நின்றுவிட்டதும், அது சரியாகிவிடும்.
8.சில பெண்கள் பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் மாதவிடாய் சுழற்சி தாமதப்படும்.
9.இந்த மாத்திரைகளை நிறுத்துவது மாதவிடாய் சுழற்சியை வழமைப்போன்று கொண்டு வர உதவும்.
10.சில பெண்கள் அதிகமான உடற்பயிற்சி மற்றும் வேலைகளில் ஈடுபடுவது மாதவிடாய் சுழற்சியை தாமதப்படுத்தும்.
11.அதீத உடற்பயிற்சி நல்லது கிடையாது. ஆகவே அதை குறைத்துக்கொண்டால் மாத விடாய் கோளாறு வராமல் காக்கும்

