மாத விடாய் வலியை போக்கும் மலிவான வழிகள்

 
periods

.

மாதவிடாய் காலத்தில் வலி உயிர்போகுதா? இதனை போக்க சில எளிய வழிகள் இதோ!

மாதவிடாய் காலத்தில் வலியை குறைக்க ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மோர் பருகலாம். வெள்ளை பூசணியை உணவில் சேர்த்துக்கொள்ளுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்தல் ஆகியவையும் உடல் சூட்டைக் குறைத்து மாதவிடாய் காலத்தில் வலியை போக்கும் . 

napkin procedure in periods time

 மாதவிடாய் காலத்தில் வலி மற்றும் அதிக ரத்தப்போக்கு  தடுக்க, சிவப்பு நிற கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நரக வேதனை வலியிலிருந்து விடுபடலாம்

மாதவிடாய் காலத்தில் வலியை குறைக்க மாங்கொட்டை (அவித்ததோ அல்லது பச்சையாகவோ), மாதுளம் பழத்தின் உள்பகுதி தோல், வாழைப்பூ ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதிலிருக்கு துவர்ப்பு மாதவிடாய் காலத்தில் வலியை அடியோடு ஒழிக்கும்

மாதவிடாய் காலத்தில் வலி மற்றும் மலசிக்கல் இல்லாமல் இருக்க நார்ச்சத்துள்ள பயிர் வகைகள் மற்றும் பழ வகைகளையும் உண்ணலாம். இதனால் வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் கர்ப்பப்பை சுத்தமாகி மலச்சிக்கல் நீங்கும்.  

மாதவிடாய் காலத்தில் வலியை குறைக்க செக்கு நல்லெண்ணெய்யை மாதவிடாய் நாள்களில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி குடித்து வந்தால் உடலில் வலிமை ஏற்பட்டு மாதவிடாய் காலத்தில் வலிஇல்லாமல் இருக்கலாம் .

மாதவிடாய் காலத்தில் வலியை குறைக்க கறிவேப்பிலையைத் தேங்காய் சேர்க்காமல் துவையல் செய்து சாப்பிட்டால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அனைத்து விதமான வலிகளுக்கும் தீர்வு கிடைத்து அந்த மூன்று நாட்களும் வலியின்றி சுகமாக கழிக்கலாம் .