கருப்பு மிளகை கிரீன் டீயில் போட்டு குடிச்சா என்னாகும் தெரியுமா ?

 
green tea health tips

நாம் மிளகை பொங்கல் மற்றும் ரசம் ஆகியவற்றில் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம் .ஆனால் சிலபேர் பொங்கலில் இருக்கும் மிளகை எடுத்து தூர போட்டுவிட்டு சாப்பிடுவது வழக்கம் ,அவர்கள் தூக்கிபோடுவது மிளகை அல்ல அவர்களின் ஆரோக்கியத்தை என்று இதை படித்து பார்த்தால் புரியும் .ஆம் மிளகில் உள்ள பைபர்னைன் என்ற பொருள் நமக்கு புற்று நோய் ஏற்படும் அபாயத்தை பெருமளவில் குறைக்கிறது .மிளகு மூலம் நமக்கு மூளை நன்றாக செயல்படும் .மேலும் முதிய வயதில் உண்டாகும் அல்சைமர் என்ற ஞாபக மறதி நோய் வராமல் தடுக்கிறது .மேலும் கருப்பு மிளகின் நன்மைகள் பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம்

pepper

1.சிலர் செரிமான பிரச்சினையால் அவதி படுவர் .கருப்பு மிளகு செரிமானத்திற்கு உதவுகிறது,

2.மிளகு வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை வெளியிடுவதால் ,உங்களின் குடல் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தால் சுத்தம் செய்யப்படுகிறது,

3.சிலருக்கு நீண்ட நாளாக குடல் பிரச்சினையிருக்கும் .அதனால் மிளகு பல்வேறு இரைப்பை குடல் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.

4. தொடர்ந்து மிளகுத்தூளை சேர்ப்பதன் மூலம் இந்த மல சிக்கலை தீர்க்க முடியும்

5.சிலர் உடல் எடை குறைக்க முயற்சிப்பர் .கருப்பு மிளகை கிரீன் டீயில் போட்டு,  எடுத்துக் கொள்ள நமக்கு எடை இழப்பு உண்டாகும்