மனம் அமைதி பெற மகத்தான வழிகள்.

 
ஸ்ட்ரெஸ்க்கு குட் பை சொல்ல ஈஸியான சில வழிகள்! #Stress

பொதுவாக மன அழுத்தம் என்பது பல நேரங்களில் நம்மை பாடாய் படுத்தி விடும் ,அந்த நேரத்தில் நாம் அந்த 
சூழலை எப்படி சமாளிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
1.சிலருக்கு சில நேரங்களில் மனம் அமைதி இல்லாது கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளுக்கு உள்ளாகும் 
2.அப்போது கத்தி கோபமாக யாரிடமும் பேசாது கண்களை மூடி அமைதியைப் பேண வேண்டும். 
3.அமைதியாக இருந்து சுற்றியுள்ள இயற்கையில் ஒலியை செவிமடுக்க வேண்டும்.
4.. சிலருக்கு சில நேரங்களில் மனதில் சோர்வு உருவாகும் . 
5.அந்த சோர்வு உருவாகும் நேரத்தில் நமக்குள் நாமே கண்களை மூடி “நான் வலிமையானவன் என்னால் இதை செய்ய முடியும்” என்று கூறவேண்டும்  
6.அப்படி கூறுவது நம்முடைய தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு நமக்குள் எதிர்மறையான சிந்தனைகள் உருவாகுவதை தடுக்கும்.
7.சிலருக்கு மனம் அமைதி இல்லாமல் குழப்பத்தில் இருக்கும் வேளைகளில் இயற்கையின் அழகை ரசிக்கலாம். 
8.முடியுமானால் அருகில் இருக்கும் கோயில், பார்க், மலைகள் போன்ற அமைதிப் பிரதேசங்களுக்கு சென்று வரலாம் 
9.அந்த நேரத்தில் தூய்மையான காற்று, இயற்கையான சூரிய ஒளி போன்றவற்றை எல்லாம் சுவாசிப்பதோடு ரசிக்கும் போது நம்மை அறியாமலே நமது மனம் அமைதி பெற்று விடும்.
10..சிலர் தோல்வி ஏற்படும் வேளைகளில் துவண்டு விடுவதுண்டு 
11.அப்போது எந்தவொரு தோல்வியின் அனுபவத்தினையும் கற்காமல் வெற்றியினை சுவைக்க முடியாது என்ற உண்மையை கூறி நம்மை தேற்றுதல் வேண்டும்.