இந்த ஒரு கீரை இவ்ளோ நோய்களை குணப்படுத்துமா ?இது தெரியாம போச்சே .
பொதுவாக கீரை வகைகள் நம் ஆரோக்கியத்திற்காக கடவுள் நமக்கு கொடுத்த வரம் என்று கூறலாம் .அந்த தளவுக்கு ஒவ்வொரு கீரையிலும் பல்வேறு நன்மைகள் இருக்கிறது .இனி இந்த கீரைகளில் பசலை கீரை மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு மூத்திர கடுப்பு வந்து பாடாய் படுத்தும் .அவர்கள் பசலைக்கீரை சாப்பிடுவதால் மூத்திரக் கடுப்பு,மட்டுமல்லாமல் நீரடைப்பு, வெள்ளை ஒழுக்கு போன்றவை நீங்கும்.

2.சிலருக்கு முகப்பருக்கள் இருக்கும் .அவர்கள் இந்த கீரையின் சாறு சாப்பிட்டால் அது முகப்பருக்களை நீக்கும்
3.சிலருக்கு மலசிக்கல் இருக்கும் .அவர்கள் இந்த கீரையை சாப்பிட மலச்சிக்கல், தொந்தி போன்ற பிரச்சனைகளை தீர்ந்து விடும்
4. பசலைக்கீரை சாப்பிடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சம நிலையில் இருக்கும் .மேலும் கண்ணுக்கு அதிக நன்மை தரும்.
5.பசலைக்கீரையை உணவில் அதிகளவு சேர்த்து கொண்டால் , உடலில் புதிய ரத்த உற்பத்தி உண்டாகும்
6.பொதுவாக உடல் சூட்டினால் ஏற்பட கூடிய கண் எரிச்சல், நீர்க்குத்தல், போன்ற நோய்கள் இந்த கீரை மூலம் சரியாகும்
7.அடுத்து சிறுநீர் எரிச்சல், வெள்ளை படுத்தல் போன்ற பிரச்சனைகள் குணமாக பசலைக்கீரையை அடிக்கடி உணவாக சமைத்து சாப்பிடுங்கள்.


