இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த பழமாகும்.
பொதுவாக பழங்கள் இயற்கை நமக்கு கொடுத்த வரங்கள் என்று கூறலாம் .அதிலும் சில பழங்கள் நம் ஆரோக்கியத்துக்கு மருந்து மாத்திரை செய்யும் வேலையை அது செய்யும் .அந்த வகையில் பப்பாளி பழம் சாப்பிடுவதால் நமக்கு எந்த நோய் வராமல் தடுக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.பப்பாளியில் அதிகம் நார்சத்து இருப்பதால் இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த பழமாகும்.
2.சுகர் பேஷண்டுகள் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நாள் முழுவதும் சீராக வைத்திருக்க உதவும்.
3.உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் உங்கள் உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ளலாம்.
4.சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கியமான வைட்டமின் ஏ, பப்பாளியில் ஏராளமாக உள்ளது. 5.வெறும் வயிற்றில் பப்பாளி சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கஉதவும் ,
6.பப்பாளி பழம் முகப்பருவை குறைக்கவும், நம்மை இளமையாக வைத்திருக்கவும் உதவும்.
7.பப்பாளியில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க சிறந்த பழங்களில் ஒன்றாக திகழ்கிறது.
8.பப்பாளி உங்கள் பசியைக் கட்டுப்படுத்தவும், வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நீண்ட நேரம் நிறைவாக உணரவும் உதவும்.

