பாதாம் பேஸ்ட்டை மஞ்சள் பாலில் சேர்த்து குடித்தால் எந்த பார்ட் பலமாகும் தெரியுமா ?

 
yellow milk benefits

உலகின் சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு பொருள்களில் ஒன்றுதான் மஞ்சள் .இந்த மஞ்சள் இயற்கை நமக்கு கொடுத்த வரம் என்று கூட கூறலாம் .அந்தளவுக்கு அது நம் இயற்கை மருத்துவத்தில் நமக்கு நன்மை செய்கிறது .இந்த மஞ்சள் கொஞ்சம் எடுத்து காய்ச்சிய பாலில் சேர்த்து தினம் குடிப்பதால் நம் உடலில் 15க்கும் மேற்பட்ட நோய்கள் குணமாவதாக கண்டறியப்பட்டுள்ளது .குறிப்பாக சுவாசக்கோளாறு ,தூக்கமின்மை கோளாறு ,ஜலதோஷம் மற்றும் இருமல் கோளாறு ,கீல் வாத கோளாறு ,மற்றும் வலிகள் போன்ற கோளாறுகள் குணமாகிறது ,மேலும் இது ரத்தத்தை சுத்த படுத்தும் ,கல்லீரலை நச்சு நீக்கும் ,பெண்களுக்கான மாதவிடாய் தசை பிடிப்புகள் ,எலும்பு வலுவூட்டல் ,செரிமான சக்தியை கூடுதல் ,மற்றும் எடை குறைப்புக்கு வழி செய்யும் .மேலும் இதன் நன்மைகளை பட்டியலிட்டுள்ளோம்

padham

1.சிலருக்கு அடிக்கடி சளி பிடித்து படுத்தியெடுக்கும் .இந்த ஜலதோஷம் மற்றும் காய்ச்சலைத் தடுக்க ஒவ்வொரு நாளும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் எடுத்துக் கொள்ள பல சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

2.சிலருக்கு தூக்க பிரச்சினை வருடக்கணக்கில் இருக்கும் .இந்த பிரச்சினை குணமாக உறங்கும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான மஞ்சள் பால் குடிப்பது உங்களுக்கு நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.

3.சிலருக்கு எலும்புகள் பலவீனமாக இருக்கும் .அவர்கள் அரைத்த பாதாம் அல்லது அவற்றின் பேஸ்ட்டை மஞ்சள் பாலில் சேர்க்கும்போது, அது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.