பாதாம் பாலுக்குள் பதுங்கியிருக்கும் ஆரோக்கிய ரகசியம்

 
padham

பாதாம் பால் மனிதனின் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது .குறிப்பாக

விலங்குகளின் பாலில் இருக்கக் கூடிய லாக்டோஸ் பலருக்கும் அலர்ஜியை ஏற்படுத்தும். அப்படி அலர்ஜி ஏற்படுபவர்களுக்கு பாதாம் பால் மிக சிறந்த ஒரு பானமாகும் .

milk

விலங்குகளின் பாலுடன் ஒப்பிடும் பொழுது பாதாம் பாலில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக உள்ளது. இது விலங்குகளின் பாலை விட 50 லிருந்து 80 சதவீதம் வரை குறைவான கலோரிகளை கொண்டுள்ளது. இருந்தாலும் சுவையில் எந்த குறைவும் இருக்காது. இதன் காரணமாக இது குறைந்த கிளைசீமிக் குறியீட்டு உணவாக கருதப்படுகிறது. அதாவது இது மனிதனின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இந்தப் பாலில் மிகவும் குறைவு என்று சுகாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்

பாதாம் பாலை தொடர்ந்து குடித்து வரும் பொழுது அது நம்முடைய மூளையின் ஆரோக்கியத்தை அதிகரித்து வைட்டமின் ஈ சத்தை அதிகரிக்கிறது . இது உங்களுடைய மூளைக்கு சரியான அளவு வைட்டமின் ஈ சத்தை கொடுத்து , அது அல்சைமர் நோய் போன்ற மூளை சம்பந்தப்பட்ட நோய்களின் ஆபத்துக்களை குறைகிறது.

மேலும் இந்த வைட்டமின் ஈ பக்கவாதம், இதயநோய், புற்றுநோய் போன்ற கடுமையான உடல் நல பாதிப்புகளின் அபாயத்தை குறைத்து ,நம் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகிறது