பாசிப்பயிருக்குள் பதுங்கியிருக்கும் ஆரோக்கிய ரகசியம்

 
paruppu

சைவ உணவுகளில் அசைவத்துக்கு இணையான புரத சத்து பாசிபயரில் அடங்கியுள்ளது .பாசிபயிரில் ப்ரோட்டின் மட்டுமல்லாமல் கார்போ ஹைட்ரேட் ,விட்டமின்கள் அடங்கியுள்ளன .கொழுப்பு இதில் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு இது சிறந்த உணவுப்பொருள் .அதிலும் பெண்கள் இதை அதிகம் எடுத்து கொண்டால் இடுப்பு வலி முதல் மூட்டு வலி வரை வராமல் தடுக்கலாம் .பாசிப்பயறில் நிறைந்துள்ள பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை இரத்த சோகையை வராமல் நம்மை பாதுகாக்கிறது

body pain tips

சிலருக்கு உடல் உஷ்ணத்தால் அம்மை நோய் வரும் .இந்த சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுத்தல் நலம் . அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்கல் சிலரை தாக்கும் .அவற்றை  குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக செயல் படுகிறது

மணத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகளான ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்கள் குணமாகும்

மேலும் ஞாபக மறதி சிலருக்கு இருக்கும் .அவர்கள் பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள்  கூறுகின்றனர்.

மேலும் ஸ்கின் பள பளபள ண்ணிருக்க சிலர் விரும்புவர்.அவர்கள்  குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கி நம் முடி ஆரோக்கியம் மேம்படும் .