ஓவரா தண்ணீர் குடிப்பவர்களை ஓட ஓட துரத்தும் நோய்கள் .

 
water can

அதிகமா தண்ணீர் குடிப்பது நல்லதா ?

தண்ணீர் குடிப்பது நம் உடலுக்கு நல்லதுதான் .அதுவே அளவுக் கதிகமாக குடிக்கும்போது நமக்கு விஷமாக மாறி உடலுக்கு நிறைய தொல்லைகள் ஏற்படும் .நாம் அளவுக்கதிகமாக தண்ணீர் குடிக்கிறோம் என்பதை சிறுநீரின் நிறத்தை வைத்து கண்டறியலாம் .இளம் மஞ்சள் நிறத்தில் யூரின் வெளியேறினால் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறோம் என்று அர்த்தம் .அதுவே அடர் மஞ்சள் நிறத்தில் யூரின் போனால் தண்ணீர் போதவில்லை என்று அர்த்தம் .மேலும் வெள்ளை நிறத்தில் யூரின் போனால் அதிகமாக தண்ணீர் குடிக்கிறோம் என்று அர்த்தம் .மேலும் அளவுக்கதிகமாக தண்ணீர் குடிக்கும்போது சில நேரத்தில் கோமா நிலை கூட ஏற்படலாம் .அதனால் அளவாக தண்ணீர் குடிப்போம் .

water

மேலும் அதிகப்படியான நீர் பருகும்போது உதடுகள், கைகள், கால்களில் வெளிர் நிறத்தில் மாறி விடும் அல்லது வீக்கம் ஏற்பட வழிவகுத்துவிடும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் தண்ணீர் பருகும் அளவை குறைக்க வேண்டும். உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றுவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொடர்ந்து சிறுநீரகங்களுக்கு வேலை அதிகமாகிவிடும் ,மேலும்  அதிகப்படியான நீரை வெளியேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அதன் செயல்பாடுகளில் பாதிப்பு நேர்ந்து அது பாதிப்படைய வாய்ப்பு உள்ளது . மேலும் அதிக தண்ணீரால் உடலும் சோர் வடைந்துவிடும்.

மேலும் ஒரு ஆரோக்கியமான மனிதன் அதிகளவில் தண்ணீர் பருகும்போது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் வீழ்ச்சி அடையும். அதன் காரணமாக தசை பிடிப்பு பிரச்னை ஏற்படும். சிறுநீரகங்களால் ஓவர் லோடால் அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாமல் போகும்போது குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு மயக்கம் வரும் சூழல் ஏற்படும் . அதனால் தண்ணீரை தேவைக்கு மட்டும் பருகினால் போதுமானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .