ஓவரா வெங்காயம் சாப்பிடுவோரை ஓரம் கட்ட காத்திருக்கும் நோய்கள் ..

 
onion

வெங்காயம் நம் உடலுக்கு பல நன்மைகள் செய்தாலும் அதற்குள் பல தீமைகளும் நமக்கு ஒளிந்திருக்கின்றன.வெங்காயம் நம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.மேலும் பார்வை ஆரோக்கியம்,இதய நோய் அபாயத்தை குறைக்கிறது ,அதாஉ மட்டுமல்லாமல் நீரிழிவு நோயை கட்டுப் படுத்துகிறது,கொழுப்பு தொப்பையை குறைக்கிறது,மூளை ஆரோக்கியம்,எலும்புகளை பலப் படுத்துகிறது முடி வளர்ச்சியை தூண்டுகிறது,மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது.இவ்வளவு அஆரோக்கியம் இருந்தாலும் அதனால் உண்டாகும் கேடுகளை பட்டியலிட்டுள்ளோம் 

“தங்கமும் வேணாம் ,வெள்ளியும் வேணாம் ,வெங்காயம் மட்டும் போதும் “என்று onion ஐ  ஆட்டைய போடும் நபர் -இனி வெங்காயத்தையும் வங்கி லாக்கரில்தான் வைக்கணும் போல

1.வெங்காயத்தால் ஏற்படும் ஒவ்வாமை : குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, அரிப்பு, முகம், உதடுகள் அல்லது தொண்டைகளில் வீக்கம், சுவாசிப்பதில் சிரமம், வயிற்று வலி, இருமல் அல்லது மூச்சுத்திணறல், வாயில் கூச்ச உணர்வு, மயக்கம் அல்லது தலைச்சுற்றல் ஆகியவை ஏற்படலாம்.

2.அதிகமாக வெங்காயம் சாப்பிட்டால் இரைப்பை அமிலத்தைத் தூண்டி அமில ரிஃப்ளக்ஸ், அசிடிட்டி, வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது 

3.வெங்காயத்தால்  கண் எரிச்சல், சிவந்து போதல் போன்ற பாதிப்புகளை உண்டாக்குகிறது.

 4.வெங்காயம் அதிகமாக சாப்பிடும் போது தசைப்பிடிப்பு, வயிறு வீக்கம்   செரிமான பிரச்சனைக்கு வழி வகுக்கிறது.

 5. வெங்காயம் அதிகமாக பச்சையாக சாப்பிடும்போதும் வாய் துர்நாற்றம் உண்டாகும்..