வெங்காயத்தை விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட எந்த நோய் விலகும் தெரியுமா ?

 
oil

நாம் சமையலில் வெங்காயத்தை சேர்ப்பது சுவைக்கும் மணத்திற்கும் என்று பலர் நினைத்தால் அது தவறு ,ஏனெனில் வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணத்தால்தான் நம் முன்னோர் வெங்காயத்தை சமையலில் சேர்த்து சமைக்கும் பழக்கத்தை உண்டாக்கினர் .இந்த வெங்காயத்தால் பல நோய்களை குணப்படுத்தலாம் .உதாரணமாக ஒரு சின்ன வெங்காயத்தை தின்று வெண்ணீர் குடித்தால் தீராத சளியும் குணமாகிவிடும் .மேலும் தும்மல் மற்றும் நீர்க்கடுப்பும் நம்மை விட்டு ஓடிவிடும் .மோரில் சின்ன வெங்காயத்தை கலந்து சாப்பிட மூல நோய் குணமாகும் ,மேலும் வெங்காய சாறை பஞ்சில் நனைத்து ஈறுகளில் தடவினால் பல்வலி முதல் ஈறு வலி வரை குணமாகும் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

onion thol benefits

1.சிலருக்கு வெட்டுக்காயம் ஆறாமல் இருக்கும் ,அந்த காயம் உள்ள இடத்தில் வெங்காயத்தை வதக்கி ஒரு துண்டுகள் காயத்தில் வைத்து வந்தால் காயங்கள் விரைவில் குணமாகும்.

2.சிலருக்கு மலசிக்கல் இருந்து கொண்டேயிருக்கும் .அவர்கள் வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெய்யில் வதக்கி சாப்பிட மலச்சிக்கல் பிரச்சனை சீராகும்.

3.சிலருக்கு அஜீரண கோளாறு இருக்கும் .அவர்களுக்கு  வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

4.சிலருக்கு தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து இருக்கும் .இப்படி  வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடி வளரும்.