குடல் புழுவை வெளியேற்றும் வெங்காயம் -எப்படி தெரியுமா ?

 
onion thol benefits

நாம் உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் தண்ணீர் ஆகியவற்றின் வழியே நம் வயிற்றுக்குள் குடல் புழுக்கள் போய் விடுகின்றன .இந்த குடல் புழுக்கள் வயிற்றில் பல்கி பெருகி நமக்கு பல தொல்லைகள் கொடுக்கின்றன .அடிக்கடி பசியெடுத்தல் ,சோர்வு ,கெட்ட சுவாசம், வயிற்று போக்கு, கருவளையம், இரவில் தூக்கம் வராமல் கெட்ட கனவுகள் காண்பது,போன்றவை இதன் அறிகுறிகள் .இந்த புழுக்களை சில இயற்கை முறைகள் மூலம் அழிக்கலாம் .பப்பாளி ,ஓமம் ,பட்டை ,அகத்தி கீரை போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்து கொண்டால் இந்த புழுக்களை அழிக்கலாம் ,மேலும் ஆங்கில மருத்துவர் சில பூச்சி மாத்திரைகளை கொடுப்பர் ,இதன் மூலமும் இந்த புழுக்களை அழிக்கலாம்

kudal

1.குடல்புழு இருப்பதற்கான அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக இதற்கான சிகிச்சையைத் தொடங்குவது நல்லது .

2., வெங்காயத்திற்கு பல்வேறு மருத்துவ பலன்கள் உண்டு.

ஆகவே இந்த நிலையில் இருந்து மீள, ஒரு சிறந்த சிகிச்சையைத் தர சிவப்பு வெங்காயம் உதவுகிறது.

3.சிவப்பு வெங்காயத்தில் உள்ள சல்பர் கூறுகள் மற்றும் ப்லேவனைடு போன்றவை பல் வேறு தீங்கு விளைவுக்கும் புழுக்களை  வெளியேற்ற உதவுகிறது.

4.பூண்டு மற்றும் அவகாடோவுடன் சேர்ந்த இந்த சிவப்பு வெங்காயம், குடல் புழுக்களைப் வெளியேற்றி நமக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது