ஆலிவ் ஆயிலுக்குள் அடங்கியுள்ள ஆரோக்கிய ரகசியங்கள்

 
hair fall prevent tips hair fall prevent tips

பொதுவாக நாம் சமையல் முதல் தலை வரை ஆயில் பயன் படுத்துகிறோம். இந்த விஷயங்களுக்கு பயன் படுத்தும் ஆயில் சாதாரண ஆயிலை விட இந்த ஆலிவ் ஆயில் பயன் படுத்தினால் நாம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அடையலாம் இந்த பதிவில் நாம் ஆலிவ் ஆயில் பயன் படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்

oil

1.செம்பட்டை முடி இருப்பவர்களுக்கு ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால் முடி கருப்பாகும்

2.ஆலிவ் ஆயில் மூலம் கூந்தல் அடர்த்தியாகவும் வளரும். தலைக்கு தேய்க்க சிறந்த எண்ணெய் ஆலிவ் எண்ணெய் தான்.

3.தினமும் இரவில் புருவங்களில் ஆலிவ் எண்ணெய்யை தடவிக் கொண்டு படுத்தால் புருவங்கள் மிருதுவாகவும் வசீகரமாகவும் இருக்கும்.

4.ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி படுத்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளிவருவதோடு, வயதான தோற்றத்தையும் கட்டுப்படுத்தும்.

5.மேலும் இதை உதடுகளில் இந்த ஆயிலை தடவினால், உதட்டில் வெடிப்பு ஏற்படாமல், மென்மையாக, பிங்க் நிறத்தில் மாறும்.

6.குளிப்பதற்கு முன் முகத்தில் ஆலிவ் ஆயிலுடன், சிறிது வினிகரை கலந்து தடவி ஊற வைத்து பின் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் சூரியக் கதிரினால் சருமம் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.

7.மேலும் ஆலிவ் எண்ணெய்யை தொடர்ந்து பூசிவந்தால் என்றும் இளமையோடு இருக்கலாம்.

8.உண்ணும் உணவில் பயன்படுத்தும் சாதாரண எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயிலை பயன்படுத்த வேண்டும்.

9.இப்படி இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால்  சருமமானது பளபளப்புடன் மிருதுவாக இருக்கும். மேலும் இது சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.

10.ஆலிவ் ஆயில் உடலுக்கு சிறந்த அழகைத் தரக்கூடிய ஒரு அழகு சாதனப்பொருள் மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த பொருள்.

11. ஆலிவ் எண்ணெயயை லேசாக சூடுபடுத்தி தலையில்  மசாஜ் செய்ய முடி உதிர்வு தடுக்கப்படும் .

12.இந்த ஆலிவ் எண்ணெயை  வாரம் இரு முறை தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கி, முடிகொட்டுவதும் நின்று விடும்.