காலையில் பழைய சோறு சாப்பிடுவதால், எந்த நோயெல்லாம் வராது தெரியுமா ?

 
tips of rice water tips of rice water

பொதுவாக பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது . பழங்காலத்திலிருந்தே  பழைய சோறு சாப்பிட்டு வந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு.நீராகாரம், பழஞ்சோறு, பழைய சாதம், பழையது என்று பலவிதமாய் அழைக்கப்படும் பழைய சோற்றுக்கு இணையான எளிய உணவு இல்லை .இந்த பழைய சாதம் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் 

1.பழைய சோறு மூலம் கிடைக்கும் நீராகாரம் வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்திருக்க உதவும் 
2.பழைய சோற்றைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்து,அதை  மறுநாள் சாப்பிடுவது நம் உடலுக்கு  கேடு பயக்கும். 
3. பழைய சோறு தயாரிக்க ,முதல் நாள் மீதியுள்ள சோற்றில் நல்ல நீரை ஊற்றி அதில் சின்ன வெங்காயத்தைத் தேவையான அளவு நறுக்கிப் போட்டு மூடிவைத்துவிட வேண்டும். 
4.மறுநாள் காலை அச்சோற்றை நீருடன் சேர்த்து சாப்பிட்டு வெங்காயத்தையும் இடையிடையே மென்று உண்டால் நம் ஆரோக்கியம் மேம்படுகிறது .
5.இந்த பழைய சோறு மூலம் இன்றைக்கு மருத்துவர்கள் கூறும் எல்லா ஊட்டச் சத்துக்களும் இதில் உண்டு. 
6.இரவு முழுக்க நீருடன் சோறு ஊறும்போது, அதில் நுண் உயிரிகள் கோடிக்கணக்கில் பெருகுகிறது. 
7.அதனோடு இந்த பழைய சோறில் வைட்டமின் பி6, பி12 போன்றவையும் இதில் அதிகம் உள்ளன. பழைய சாதம் புளித்து நொதிக்கும்போது இந்த விளைவுகள் உண்டாகின்றன.
8.சாதாரண தானியங்கள், பருப்புகளைவிட முளைகட்டிய பின் அவை பலமடங்கு சக்தியும், சத்தும் மிக்கனவாய் மாறுகிறது  
9.,அது போல்  பழைய சோறு நீரில் நொதிக்கும்போது அதன் பயன் பன்மடங்கு உயருகிறது.
10.காலையில் இந்த பழைய சோறு  சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது