ஓமத்துக்குள் ஒளிந்திருக்கும் ஓறாயிரம் நன்மைகள்

 
stomach

ஓமம் ஒரு மசாலா பொருளாக நம் சமையலறையில் இடம் பெறுகிறது .இதை அளவாக பயன்படுத்தினால் நமக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் .அளவுக்கதிகமாக போனால் மோசமான விளைவுகளை கொடுக்கும் .மேலும் வயிறு சம்பந்தமான கோளாறுக்கு மிக நன்மையை அது கொடுக்கும் .ஓம நீர் ,ஓம தேநீர் ,என்று பல்வேறு வடிவத்திலும் இது கிடைக்கிறது ,பிஸ்கட்டில் கூட இது சுவைக்காக சேர்க்கப்டுகிறது

oamam

காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் பச்சை ஓம விதைகளை சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும்

வயிறு கோளாறு உள்ளவர்கள் ஓமத்தை (Ajwin) நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலையில் அருந்தி வந்தால் உடல் ஆரோக்கியம் மேலும் மேலும் சிறக்கும்

வயிறு கோளாறு உள்ளவர்களுக்கு  ஓமம் அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கும் இந்த ஓமத் திரவத்தை அருந்தினால் வலியில் இருந்து விடுபட்டு அந்த நாட்களை நிமமதியாக கழிக்கலாம்

வாய்வு, வயிற்று வலி ,சளி ,சுவாச கோளாறு ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓமத் திரவம் அற்புதமாக வேலை செய்யும் மருந்து.

இயற்கையாக உடல் எடையை குறைக்க விரும்பினால், தினசரி உணவில் ஓமம் விதைகளை சேர்த்துக்கொண்டால் நம் ஆரோக்கியம் சிறக்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது