ஓமம் நீரை குடிப்பதால் உடலில் எந்த பிரச்சினை விலகி ஓடும் தெரியுமா ?

பொதுவாக நமக்கு முதல் எதிரி எதுவென்றால் கெட்ட கொழுப்புதான் .இந்த கெட்ட கொழுப்பு சேர்வதால் பல நோய்கள் நம்மை தாக்குகிறது .அதனால் இந்த பதிவில் கெட்ட கொழுப்பை கரைத்து
உடல் எடையை குறைக்க உதவும் பானங்கள் குறித்து பார்க்கலாம்.
1.இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதனால் பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளும் செய்து உடல் எடையை குறைத்து வருகின்றனர்.
2.மேலும் இந்த உடல் பருமன் காரணமாக உடலில் பல்வேறு நோய்களும் வரக்கூடும் என சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்
3.குறிப்பாக உடல் பருமனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் அதிகமாக வரக்கூடும்.
4.எனவே அந்த உயிரை கொல்லும் நோயிலிருந்து நாம் விடுபட உடல் எடையை குறைக்க சில பானங்களை நாம் குடிக்கலாம்.
5.முதலில் சீரகத்தை இரவில் ஒரு பாத்திரத்தில் அரை டீஸ்பூன் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து விடவும்
6.பிறகு அந்த சீரக நீரை காலையில் இருந்து வயிற்றில் குடிக்க வேண்டும்.
7.இந்த சீரக நீர் மட்டும் இல்லாமல் ஓமம் நீரைகுடிக்கலாம் இந்த நீரை குடிப்பதால் செரிமானப் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு விடலாம்
8.இந்த ஓமம் நீர் வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைக்க உதவும்.
9.அடுத்து கொழுப்பை கரைக்க சோம்பு தண்ணீர்குடிக்கலாம் .இந்த நீரை குடித்து வரும்போது அது வயிற்றுக்கு குளிர்ச்சியை தரும்
10.இந்த சோம்பு நீர் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
11.எனவே ஆரோக்கியம் தரும் பானங்களை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.