அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் என்னாகும் தெரியுமா ?

 
milk

பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகளை குறித்து பார்க்கலாம்.

1.பாலில் புரதம் தாதுக்கள் வைட்டமின் டி கால்சியம் போன்ற பல சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.

2.எலும்புகளுக்கு வலு சேர்ப்பதில் பங்கு வகிக்கிறது .

3.ஆனால் பாலுடன் சேர்த்து நாம் சில உணவுகளை சாப்பிட்டால் அது நம் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் .அது குறித்து பார்க்கலாம்.

4.குறிப்பாக அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் அது அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.

5.தர்பூசணி சாப்பிட்ட பிறகு குடித்தால் வாயு தொல்லை ஏற்படுத்தி விடும்.

tharpoosani

6.சிலர் வாழைப்பழத்துடன் சேர்த்து பால் குடிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருப்பார்கள்

7.ஆனால் இரண்டும் ஒன்றாக சேர்ந்தால் அஜீரண பிரச்சனையை ஏற்படுத்தி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வழி வகுக்கும்.

8.இது மட்டும் இல்லாமல் வைட்டமின் சி நிறைந்த பழங்களுடன் பால் சேர்த்து குடித்தால் அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.

9.புளிப்பு உணவுகள் எடுத்துக் கொண்டால் அரை மணி நேரம் கழித்து பால் சம்பந்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வயிற்றுப்போக்கு வர வாய்ப்பு அதிகம்.

10.மேலும் பாலும் கீரையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமானத்திற்கு நேரம் அதிகமாக எடுத்துக் கொள்ளும். இதனால் வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

11.எனவே பால் ஆரோக்கியம் நிறைந்தது என்றாலும் அதனுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அது நம் உடலுக்கு தீமையை விளைவுக்கும் என்று தெரிந்து கொள்வோம்.