இரவில் இந்த பழங்களை சாப்பிட்டால் எந்த நோய் தாக்கும் தெரியுமா ?

 
Fruit

நாம் உடல் நல பிரச்சினைக்கு மருத்துவரிடம் சென்றால் அவர் நமக்கு முதலில் பரிந்துரைப்பது பழங்களை சாப்பிட சொல்வது .ஆனால் எந்த பழங்களை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று நாம் புரிந்து கொண்டு அதற்கிற்றாற்போல் பழங்களை சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும் ,காலை நேரத்தில்  அன்னாசி, செர்ரி, கிவி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம். காலையில் ஆப்பிள் சாப்பிடுவதன் மூலமாக உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

banana

அன்னாசி, அவகோடா, கிவி போன்ற பழங்கள் இரவில் சாப்பிட உகந்த பழங்கள் ஆகும்.மதிய நேரம் வாழைப்பழம் அல்லது மாம்பழம் சாப்பிடலாம்

இரவில் சில பழங்களை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். .இரவில் எந்தெந்த பழங்களை சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது பலன் தராது. பலர் உடற்பயிற்சி செய்த பிறகு மாலையில் வாழைப்பழத்தை சாப்பிடுகிறார்கள். ஜூஸாக இருந்தாலும் சரி, ஃப்ரூட் சாலட்டாக இருந்தாலும் சரி, இரவில் சாப்பிடக் கூடாது. நீங்கள் இரவில் வாழைப்பழங்களை உட்கொண்டால், அது உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும், அதனால் தூக்கம் வருவதில் சிக்கல் இருக்கலாம். அதனால் இரவில் வாழைப்பழத்தை சாப்பிடவே கூடாது. 

  இரவில் ஆப்பிள் சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு நல்லதல்ல. அதிகப்படியான நார்ச்சத்து காரணமாக, சாப்பிட்ட பிறகு தூங்கும் போது, வாயு அல்லது அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

 

இரவில்  சப்போட்டா சாப்பிட வேண்டாம். சப்போட்டாவில் சர்க்கரையின் அளவு அதிகம்.  எனவே சப்போட்டா சாப்பிட்டால், அது உங்கள் உடலின் சர்க்கரை அளவையும், ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தூங்குவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, இரவில் சப்போட்டா பழம் சாப்பிட வேண்டாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்