இந்த இரவு நேர உணவுகள் உங்க குடலை குதறி எடுத்து விடுமாம்

 
junk food

பொதுவாக இரவு நேர உணவில் நாம் விழிப்புடன் இருந்தால் ,மறுநாள் வயிறு கோளாறுகள் வராமல் தப்பிக்கலாம் .ஆனால் இப்போதெல்லாம் இரவில்தான் பஃபே உணவுகளை அளவுக்கதிகமாக சாப்பிட்டு உடல் பருமனுக்கு ஆளாகின்றனர் .மேலும் இரவில் துரித உணவுகளை சாப்ப்பிட்டும் வயிறை கெடுத்து கொள்கின்றனர் .இனி இந்த பதிவில் எந்த உணவால் என்ன பாதிப்பு என்று பார்க்கலாம் 

food

1.பலருக்கு அஜீரணம், மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்படும் .இதற்கு காரணம்   நேரத்திற்கு ஏற்ற உணவுகளை சாப்பிடாதது தான் ..

2.இந்த அஜீரணத்திற்கு காரணம்  பெரும்பாலும் காலை மற்றும் மதிய வேலை உணவுகளால்  பிரச்சனை அளிக்காது.

3.இந்த வயிறு கோளாறு வராமலிருக்க இரவு நேர உணவுகளில் அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம்.

4.சிலர் படுக்கைக்கு போகும் முன் மது அருந்துவதை பழக்கமாக வைத்திருப்பார்கள். இது சரியான முறை அல்ல.

5.நீங்கள் மது அருந்திவிட்டு அப்படியே தூங்கும் போது, வயிற்றில் மிகுதியான அமிலத்தன்மை உள்ள மது தங்குவதால் பல உடலநல கோளாறுகளை ஏற்படுத்தும் .

6.மேலும் சிலர் இரவு நேர உணவுகளுடன் சோடாவை குடிப்பர் . இது குடல் வால்வுகளை பாதித்து விடும். 7.இயற்கையிலேயே சோடாவில் அதிகப்படியான அமிலச்சத்து இருப்தால் வயிறு கோளாறு உண்டாகும்

8.மேலும் சாக்லேட்டில் கொழுப்புச்சத்து அதிகம் இருப்பதால் இரவில் இதை சாப்பிடக்கூடாது .

9.கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளில் பாலிலும் ,சீஸில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது.

10.இரவு நேரத்தில் சீஸை சாப்பிடுவதும் உடல் எடை கூட வழி செய்யும் .

11.மேலும் இரவு நேரங்களில் சிட்ரஸ் உணவுகளையோ அல்லது ஜூஸ் வகைகளையோ பருகுவது நல்லது அல்ல .

12.இதற்கு பதிலாக  ஆப்பிள் போன்ற சில வகை பழங்களை நேரடியாக உண்பது உடல்நலத்திற்கு உகந்தது.