இரவில் இந்த உணவுகளை எடுத்து கொண்டால் கரண்ட் இல்லாட்டியும் கரெக்ட் டயத்துக்கு தூக்கம் வரும்

 
food

இரவு நேரத்தில் கடினமான உணவுகளை சாப்பிடாமல் லேசான உணவுகளை எடுத்துக் கொண்டால் நிம்மதியான உறக்கம் பெறுவீர்கள். அதே மாதிரி இரவு நேரங்களில் காபி போன்றவற்றை பருகக் கூடாது. ஏனெனில் காபி போன்றவை உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை தராது. இரவு நேரங்களில் விழிப்பை உண்டாக்கும். நீங்கள் சரியாக தூங்கா விட்டால் எல்லாவிதமான நோய்களும் வர வாய்ப்பு உள்ளது. எனவே இரவு நேரங்களில் உங்க தூக்கத்தில் கவனமாக இருப்பது மிக மிக அவசியம். இரவு நேரங்களில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவோம்

Sleeping

இரவு தூக்கத்தை தொலைத்துவிட்டு திண்டாடுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். போதிய உழைப்பு இல்லாதது, மற்றும் முறையற்ற உணவு பழக்கவழக்கங்களும் இரவு தூக்கத்தை தொலைக்க ஒருவகை காரணம் ஆகும். சில வகை உணவுகளை நாம் தூங்க செல்வதற்கு முன் எடுத்துக்கொள்ளலாம்.

செர்ரி பழங்கள்

நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.

இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் செர்ரிபழத்தில் உள்ளது.

அதனால் இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.

வாழைப்பழம்

இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் வாழைப்பழத்தில் உள்ளது.

அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் என்கிற அமினோ அமிலமும் உள்ளது. இந்த எல் ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTP ஒரு என்கிற ரசாயனமாக மாறிவிடும்.

அதன் பிறகு இந்த 5 HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

டோஸ்ட்

மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டும்.

இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும்.

ஓட்ஸ் உணவு

ஓட்ஸ் கஞ்சி ரத்தத்தில் இருக்கிற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டப்படும்.

கதகதப்பான பால்

வாழைப்பழத்தில் இருக்கும் எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறது, அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமாக உறக்கம் வரவைக்கும்.

அதுமட்டுமில்லாமல் பாலில் அதிக கால்சியம் இருப்பது உறக்கத்தை தூண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.