புது ரத்தம் உடலில் உற்பத்தியாக உதவும் பழங்கள்

 
health

பொதுவாக பழங்கள் நம் உடலுக்கு ஏராளமான மருத்துவ நன்மைகளை அளிக்கிறது .இயற்கை நமக்கு அளித்த கொடைதான் பழங்கள் .அந்த பழங்களில் நம் உடலில் புது ரத்தம் உற்பத்திக்கு உதவும் பழங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.மாதுளை பழம் உடலுக்கு நல்லது. 100 கிராம் மாதுளை பழத்தில், 0.30 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது.

madhulai

2.மாதுளை பழத்தில் ஆக்சிஜன் ரேடிக்கலை உறிஞ்சும் திறன்  அதிகம் உள்ளதால் நமக்கு நலம் தரும் 

3.சிலர் மாதுளம்பழச் சாற்றில் தேன் கலந்து தினமும் காலை உணவுக்குப் பின்னர் சாப்பிட்டு வருவர் .இப்படி வந்தால், புது ரத்தம் உற்பத்தியாகும் .

4.அடுத்து 100 கிராம் அத்திப்பழத்தில் இரண்டு மில்லி கிராம் இரும்புச்சத்து நிறைந்து உள்ளது.

5.இதில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், நம் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து நமக்கு ஆரோக்கியம் தரும்

6.அடுத்து 100 கிராம் பேரீச்சம்  பழத்தில்  277 கலோரிகள் உள்ளன; 0.90 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது.

7.பேரீச்சம்  பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் அதிகமாகக் கிடைக்கும்.

8.அடுத்து பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் நம் உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.

9.அடுத்து நம் உடலில் ரத்தம் உற்பத்திக்கு செம்பருத்தி உதவும் .செம்பருத்திப் பூவை சுற்றியுள்ள இதழ்களை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்

10.அடுத்து ரத்த உற்பத்திக்கு நாவல் பழம் உதவும் .நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும் .