நெருஞ்சி முள்ளுடன் தனியாவை சேர்த்து குடிச்சா எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?

 
health

பாதைகள், புல்வெளிகள், தரிசு நிலங்கள், வயல்வெளிகள், தோட்டபாதைகள் என எல்லா இடங்களிலும் பரந்து வளர்ந்து கிடக்கும் நெருஞ்சி முள் பல மருத்துவ குணமுடையது .நாம் வைத்தியத்துக்கு மூலிகைகளை தேடி போக வேணாம் .இப்படி நாம் போகும் பாதையிலேயே இந்த மூலிகை வளர்ந்து நமக்கு உதவுகிறது . கோடை காலத்திற்கேற்ற மூலிகை இது .இதன் பயன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

nerunji

இந்த சிறப்புகள் வாய்ந்த நெருஞ்சி சிறுநீரக பிரச்சனைகளைக் குறைக்க உதவுகின்றது. நெருஞ்சி முள் 25 கிராம், தனியா 5 கிராம் இரண்டையும் அரைலிட்டர் தண்ணீரில் சேர்த்து அவை பாதி டம்ளராக வரும் வரை சுண்டக்காய்ச்சி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் கால் டம்ளர் அளவு குடித்துவர சொட்டு சொட்டாக பிரியும் சிறுநீர் வியாதி குணமாகி நம் கிட்னிக்கு பெரும் நன்மை புரிகிறது .

சில பெண்களின் கர்ப்பப்பைப் பாதையில்  அழற்சி உண்டாகி கருத்தரித்தல் தள்ளி போவதால் வேதனை படுவர் .அந்த பெண்களுக்கு நெருஞ்சி முள் உதவும். நெருஞ்சி முள் மற்றும் நெருஞ்சி வேர் ஒரு பங்குக்கு இரண்டு பங்கு பச்சரிசி சேர்த்து வேகவைத்து வடிகட்டி கஞ்சியாக்கித் தினமும் ஒரு டம்ளர் வீதம் 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் இந்த கர்ப்ப பை பிரச்சினை தீர்ந்து குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்

மேலும் பலர் இரவு நேரம் கண் விழித்து நைட் ஷிபிட் பார்ப்பதால் வரும் கண் எரிச்சல், கண்களில் உஷ்ணம், கண் சூடு, கண் சிவப்பு , கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளத் தடுப்பதற்கும் இந்த நெருஞ்சி முள் பயன்படுகின்றது