வேப்பிலைகளை மோரில் கலந்து குடிப்பது எந்த நோய்க்கு சிகிச்சை தெரியுமா

 
Buttermilk

பொதுவாக நமக்கு அடிக்கடி ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு டாக்டரிடம் செல்லாமல் அதற்கு வேப்பிலை சிறந்த தீர்வாக உள்ளது .அதனால்தான் அந்த காலத்த்தில் நம் கிராமங்களில் ஒவ்வோர் வீட்டிலும் வேப்ப மரம் வளர்த்தார்கள் ,இந்த வேப்ப மரத்து காற்று கூட நல்ல மருந்து ,எனவே இந்த வேப்பிலை மூலம் குணமாகும் நோய்கள் பற்றி இந்த பதிவில் பாக்கலாம்

1.தலையில் உள்ள பொடுகில் இருந்து தப்பிக்கவும், சரும பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும், வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் வேப்பிலை சிறந்த நிவாரணமாக இருக்கிறது. .

neem

2.நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்தாலே போதும். அதற்கு நல்ல தீர்வு, வேப்பிலை தான்.

3.ஒரு லிட்டர் தண்ணீரில் 15 முதல் 20 வேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்க வேண்டும்பின்பு, இலைகளை வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

4.இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்இதனை தொடர்ந்து செய்து வந்தாலே போதும். நீரிழிவு நோய் படிப்படியாக குறைந்துவிடும்.

5. வேப்பிலையை வெறுமென சாப்பிடாமல், 10 வேப்பிலைகளை எடுத்து நன்றாக மை போல அரைத்து மோரில் கலந்து குடித்தால் மோரில் கலந்து டயேரியா குறைந்துவிடும்.

6.குடல்புழுக்கள் பிரச்சனை தற்போது பெரியவர்களுக்கும் ஏற்படுகிறது.

7.குழந்தைகளுக்கு இந்த குடல் புழு பிரச்சனை ஏற்பட்டால் இளம் வேப்பங்கொழுந்து இலைகளை சாப்பிட கொடுக்க வேண்டும்.

8.பெரியவர்கள் இலைகளை தண்ணீரில் கொதிக்கவிட்டு சுண்டவைத்து குடிக்க வேண்டும்.

9.ஒரு டம்ளர் தண்ணீரில் 5 வேப்பிலைகளை போட்டு கொதிக்க விட்டு அதனை சுண்டவைத்து குடிக்க வேண்டும்.

10.அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.