பெண்களுக்கு கழுத்தில் காணும் கருமை நீங்க எதை தேய்க்கணும் தெரியுமா ?
பொதுவாகவே ஆண்களுக்கும் பெண்களுக்கு கழுத்தில் கருமை என்பது அதிகமாகவே காணப்படும்.இந்த கருமை நீங்க பல வைத்தியங்களை செய்து பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கும் .
இந்த கருமை நீங்க எப்படி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி எளிதாக தயாரிக்கலாம் என இந்த பதிவில் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
1.பெண்களுக்கு கழுத்தில் காணும் கருமை நீங்க தேவையான பொருட்கள் பின் வருவன
2.முதலில் ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சைச்சாறு எடுத்து கொள்வோம்
3.அடுத்து அந்த லெமன் சாறுடன் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கொள்வோம்
4.அடுத்து தேன் - ஒரு மேசைக்கரண்டி எடுத்து கொள்வோம்
5.அடுத்து ஆலிவ் ஆயில் - 1/2 மேசைக்கரண்டி எடுத்து கொள்வோம்
6.இந்த கருமை நீக்கும் மருந்தை இனி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் செய்முறை
7.முதலில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து கழுத்தில் கீழ் இருந்து மேல் வரை 20 நிமிடம் வரை காய விட வேண்டும்.
8.பிறகு அந்த மூலிகை கலவையை சூடான நீரில் கழுவ வேண்டும்.
9.இவ்வாறு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வரை செய்த வர கழுத்தில் உள்ள கருமை நீங்கும்.
10.அடுத்து எலுமிச்சை மற்றும் தேன், உருளைக்கிழங்கு சேர்த்து கழுத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை காய வைத்துக் கழுவினாலும் இந்த கருமை நீங்கும்


