கிராம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டால் எந்த நோய் ஓடிடும் தெரியுமா ?

 
milk milk

பொதுவாக  நம் பாரம்பரியமான வீட்டு வைத்தியத்துக்கு ஈடு இணையில்லை .அதனால் நம் முன்னோர்கள் சொன்ன சில சித்த வைத்திய குறிப்புகளை பற்றி  பார்க்கலாம்

1.தீராத தலைவலி குணமாக வெற்றிலை சாறுடன் கிராம்பை இடித்து தலையில் பத்து போட்டால் குணமாகும்
2.அஜீரணத்துக்கு கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் போட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி குடித்தால் அஜீரணம் இருக்குமிடம் தெரியாது
3.தீராத வாய்ப்புண் குணமாக நாவற்பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்

health tips of cloves in hot water
4.வாயுத்தொல்லை நீங்க வேப்பம்பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரோடு சேர்த்து உட்கொண்டு வாருங்கள்  மேலும் இதன் மூலம் ஆறாத வயிற்றுப்புண்ணும் குணமாகும்.
5.சிறிது கிராம்பு எண்ணெயை மிளகு தூளில் கலந்து சொத்தை பல் மீது தடவினால் பல் வலி பறந்து போகும்
6.தீராத மலசிக்கல் குணமாக செம்பருத்தி இலைகளை பொடியாக்கி தினமும் இருவேளை சாப்பிட்டு வர நலம் சேர்க்கும் .
7.கிராம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டால் இருமல் இருக்குமிடம் தெரியாமல் மறைந்து போகும்
 .