பல வலிகளை போக்கும் நந்தியா வட்டையின் மருத்துவ குணங்கள்.
பொதுவாக நந்தியா வட்டை ஒரு மருத்துவ குணமுள்ள செடியாகும் .இதன் பூ ,வேர் ,இலைகள் அனைத்துமே மருத்துவ குணமுள்ளவை .இந்த செடியிலிருந்து வடியும் பால் கூட மருத்துவ குணமுள்ளது .இந்த நந்தியா வட்டையின் மருத்துவ நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.நந்தியா வட்டப் பூ 50 கிராம், களாப் பூ 50 கிராம் 1 பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயில் ஊறவைத்து விடவும்
2.பின்னர் அதை 20 நாள்கள் வெயிலில் வைத்து விடவும்
3.பிறகு அதை வடிகட்டி ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டுவர பூ, சதைவளர்ச்சி குணமாகும் ,
4.இந்த சிகிச்சையால் பல வித கண் படலங்கள் குணமாகும்
5.இந்த சிகிச்சையால் பார்வை மந்தம் நீங்கும்.
6.நந்தியா வட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு குணமாகும்
7.நந்தியா வட்டை மூலம் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
8.நந்தியா வட்டை வேர் மூலம் கண் நோய் மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும்.
9.நந்தியா வேர்ப்பட்டை வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது.
10.நந்தியா வேர் கசப்பானது.இது பல்வலி போக்கும். வலிநீக்கி , கட்டை குளுமை தருவது.
11.வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும்

