வாரமிருமுறை ஆட்டு ஈரலை சாப்பிட்டால் ,நம் உடலில் நேரும் அதிசயம்
பொதுவாக அசைவ உணவில் நம் உடலுக்கு தேவையான புரத சத்துக்கள் அதிகம் கிடைக்கும் ,சிக்கெனில் ஏராளமான ப்ரோட்டின் உள்ளது . மட்டுமல்லாமல் சாப்பிட சுவை தர கூடியது .மேலும் மட்டனில் உள்ள ஈரல் நம் உடலுக்கு பல்வேறு சத்துக்களை கொடுக்கிறது .அதனால் ஈரலை அடிக்கடி கிரேவியாய் சமைத்து சாப்பிட நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று இந்த ப்பதிவில் பாக்கலாம்

1.சிலர் மட்டனில் ஈரலை விரும்பி சாப்பிடுவர் .இந்த ஆட்டு ஈரலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, வைட்டமின் பி2, பாஸ்பரஸ், தாமிரம், செலினியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளன
2.சிலர் பலவீனமாக காணப்படுவர் .ஆட்டு ஈரலில் இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலங்கள் நிறைந்திருப்பதால் உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்யும்
3. ஆட்டு ஈரல் புதிய ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதால் ரத்தசோகையை குணப்படுத்துகிறது.
4.கர்ப்பிணிகள் வாரத்திற்கு ஒருமுறையாவது ஆட்டு ஈரல் உட்கொண்டு வருவது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்,
5.ஆட்டு ஈரல் தொடர்ந்து உண்பதால் கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
6.ஆட்டு ஈரலில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் உடல் தசைகளை வலிமையடைய செய்வதுடன், எலும்புகளை பலப்படுத்துகிறது.
7.உடல் மெலிந்து பலமில்லாமல் இருப்பவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை ஆட்டு ஈரலை தாராளமாக எடுத்துக் கொண்டால் பலம் பெறலாம்
8.ஆட்டு ஈரல் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கும்.
9.அதுமட்டுமின்றி ஆட்டு ஈரல் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால் சோர்வை போக்கும்,
10. மிக முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது ஆட்டு ஈரல்


