முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோய் விலகும் தெரியுமா ?

 
murungai keerai benefits

நம் நாட்டு கிராமங்களில் பலரின் வீட்டு வாசலில் இருக்கும் முருங்கை மரத்தின் கீரையில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது .அதனால்தான் அந்த காலத்தில் இதை வீட்டு வாசலில் நட்டார்கள் .ஆனால் இன்று அந்த மரங்கள் காணாமல் போய் கொண்டே வருகிறது .எத்தனை வைட்டமின் மாத்திரை சாப்பிட்டாலும் கிடைக்காத இரும்பு சத்து இந்த முருங்கை கீரையில் கொட்டி கிடக்கிறது .இது ஆஸ்துமா ,போன்ற நோய்களை கூட குணப்படுத்துகிறது ,இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் .எலும்பு சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது .மேலும் இந்த கீரையின் நன்மைகளை பார்க்கலாம்

sugar

1.முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து உண்டு வர நீரிழிவு நோய் நீங்கும்.

2.முருங்கைக் கீரை உடலுக்கு வலிமையை கொடுக்கும். மஞ்சள் காமாலை, மாலைக்கண் போன்ற நோய்களை நீக்கும்.

3.முருங்கைக் கீரை மூலம் இரத்தம் விருத்தியடையும் உடலுக்கு தேவையான சத்துக்களை பெற பெரிதும் பயன்படும்.

4.குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் முருங்கைக் கீரையை உணவுடன் சேர்த்து வந்தால் பால் நன்கு சுரந்து குழந்தை ஆரோக்கியமாய் வளரும்

5.முருங்கைக்கீரை சாற்றுடன் சிறிது சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் இருமல், குரல் கம்மல் போன்றவை நீங்கி நம் உடல் ஆரோக்கியமாய் இருக்கும் .