நாப்பது நாள் இந்த கீரையை குழந்தைகள் சாப்பிட்டால் 41ம் நாள் எப்படி இருப்பாங்க தெரியுமா ?

 
mulai keerai mulai keerai

தண்டுகீரையின் இளஞ் செடியான முளைக்கீரை வருடம் முழுவதும் கிடைக்கும் .இதை கடைந்தோ அல்லது பொரித்தோ சாப்பிடலாம் .இது பழுப்பு மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கும் .

முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் உடலுக்கு போதிய அளவில் கிடைக்கும்.

முளைக்கீரை பயன்கள் | Mulai keerai benefits in Tamil

1.முளை கீரையை குழந்தைகளுக்குத் தொடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வந்தால் 41ம் நாளில் நன்கு உயரமாக வளர்ந்து விடுவர் ..சிறுவர், சிறுமியருக்கு முளைக்கீரை நல்லது

2.சிலர் பித்த நோய், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றநோயால் அவஸ்த்தை படுவர் .அவர்கள் முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டால்  சரியாகும்.

3.முளைக்கீரையை சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது. சிலர் குடல் புண் வந்து அவஸ்த்தை படுவர் .அப்போது முளைக்கீரையுடன் சிறு பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அந்த அல்சர் குணமாகும்

4.சிலர் முகப்பரு, தேமல் போன்ற ஸ்கின் பிரச்சினையால் அவஸ்த்தை படுவர் அவர்கள் முளைக்கீரை சாற்றில் முந்திரி பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால்,  அவை மறைந்து முகப்பொலிவு உண்டாகும்.

5.சிலர் சொறி, சிரங்கு முதலிய நோய்வந்து அவஸ்தை படுவர் ,அவர்கள் , இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்த கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது.