முளை கட்டிய தானியங்கள் இத்தனை நோயின் வலையில் விழாமல் காக்குமா ?

 
mulai thaniyam

பொதுவாக நாம் காலை வேளையில் எடுத்து கொள்ளும் உணவு வகைகள், நம் உடல் நலத்துக்கு அன்றைய நாள் முழுவதும் சிறப்பாக செயல் பட வைக்கிறது .அந்த வகையில் நாம் காலை வேளையில் முளை கட்டிய தானியங்களை எடுத்து கொண்டால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

நீரிழிவுக்கு சிறந்த மருந்தாக செயல்படுவதுடன் கீழே குறிப்பிட்டுள்ள பல உடல் நல பிரச்சனைகளையும் முளை கட்டிய தானியங்கள் தீர்க்கின்றன.அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

siru thaniyam

1.நம் உடலுக்கு ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் தேவை .இந்த ஒமேகா -3 முளை கட்டிய தானியங்களில் காணப்படுகிறது.

2.முளை கட்டிய தானியங்கள்  நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் தமனிகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் கொழுப்பை இல்லாமல் செய்கிறது

3.முளை கட்டிய தானியத்தில், வைட்டமின் ஏ,  நார்ச்சத்து மற்றும் புரத சத்து அதிகம் உள்ளது .இது , உங்கள் கண்பார்வையை கூர்மையாக்க உதவுகிறது.

4.பொதுவாக முளை கட்டிய தானியத்தில் ஆக்ஸிஜனேற்றிகளும் உள்ளன.  இது உங்கள் கண்களுக்கு நண்மை செய்கிறது

5.அது மட்டுமல்லாமல் முளை கட்டிய தானியங்களை உட்கொள்வது நம் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

6.முளை கட்டிய தானியங்களில் கலோரிகள் குறைவாகவும் புரதச்சத்து அதிகமாகவும் இருப்பதால்  நம்  எடை கட்டுக்குள் இருக்கும்.

7.சிலர் உடல் பலவீனமாக இருக்கும் .அவர்கள் முளை கட்டிய தானியங்களை உட்கொள்வதால் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் அதிகரிப்பதுடன், இரும்பு சத்தும் அதிகரிக்கிறது. 

8.சிலர் உடலில் ஆக்சிஜென் குறைவாக இருக்கும் , இது அவ்களின் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது என்பதோடு, உறுப்புகள் மற்றும் செல்களுக்கு ஆக்ஸிஜன் சென்றடவதை எளிதாக்குகிறது.