மூட்டு வலி முதல் முதுகு வலி வரை தடுக்க,இந்த உணவுகளை இனியாவது எடுத்துக்கோங்க

 
bone

சரியான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் உடலில் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ளலாம். விட்டமின் டி எலும்பு வலிமைக்குதான் முதல் முன்னுரிமை.

அது கொஞ்சம் குறைந்தாலும் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசை வலி ஆகியவை ஏற்படும். அதன் குறைபாடு அதிகரித்தால் கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

கனிமச் சத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்கிறது. கனிமங்களில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் புரதம், முழங்கால் மூட்டுக்கு வலுவூட்டும். எலும்புகளில் கால்சியம் குறைபாடு ஏற்பட்டால், கடுமையான எலும்பு நோயான ஆஸ்டியோபோரோசிஸ் (Oestroporosis) ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளது 

விட்டமின் டி குறைபாடு அறிகுறிகள்:

உடல் சோர்வு, முதுகு மற்றும் இடுப்பு வலி, மூட்டு வலி, ஆறாத காயம், மன அழுத்தம் அதிகரித்தல், முடி உதிர்வு.

சில உணவுகளை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவாகும்.

இந்த 10 உணவுகளுடன் எளிதாகத் தவிர்க்கலாம் முழங்கால் மூட்டுவலி..! #HealthTips

 

முட்டையில் புரோட்டீன் மட்டுமன்றி விட்டமின் டியும் நிறைவாக உள்ளது. அதன் மஞ்சள் கரு கால்சியம் மற்றும் பல வகை தாதுக்களையும் உள்ளடக்கியது, எனவே விட்டமின் டி குறைபாட்டை ஈடு செய்ய முட்டை சாப்பிடுவது நல்லது.

சிட்ரஸ் அதிகம் நிறைந்த திராட்சை பழம் எலும்பு தேய்மானம் ஆகாமல் பாதுகாக்கும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது.

சால்மன் ரக மீன்களில் ஒமேகா 3 ரக பேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானவை ஆகும். மேலும் இதில் விட்டமின் டி நிறைந்துள்ளது.

கீரையில் புரதச்சத்து இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே..ஆனால் அதில் விட்டமின் டி-யும் இருப்பது தெரியுமா..? மருத்துவர்களும் வாரம் ஒரு முறையேனும் கீரை சாப்பிடுங்கள் என சொல்வதற்கு இதுவும் ஒரு காரணம்.

பால் 

தொடர்ச்சியாகப் பால் அருந்திவந்தால், முழங்கால் மூட்டில் ஏற்படும் ஆர்த்ரிட்டிஸ் அதிகரிக்காமல் இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பாலில் அனைத்துச் சத்துக்களும் இருக்கின்றன. எனவே, வயதானவர்களின் (எலும்பு சம்பந்தமான நோய்களால் எளிதில் பாதிக்கப்படுபவர்கள்) தினசரி உணவில் பால் கட்டாயமாக இடம்பெற வேண்டும். தினமும் ஒரு கிளாஸ் பால் அருந்திவந்தால், பெண்கள் முழங்கால் மூட்டு சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.

சீஸ் 

சீஸில் சத்து தரும் பாக்டீரியாவான புரோபையோட்டிக் (Probiotic) உள்ளது. இந்த வகை பாக்டீரியா, மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் வலியையும் குறைக்கக்கூடியது. புரோபையோட்டிக் பாக்டீரியா அடர்த்தியான சீஸில் அதிகம் இருக்கிறது. இதோடு சீஸில் எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம் சத்தும் உள்ளது. சிலருக்கு சீஸ் ஒவ்வாமை இருந்தால், மூட்டுகளில் வீக்கம் ஏற்படலாம். எனவே, அவர்கள் மட்டும் சீஸைத் தவிர்க்கவும் 


எள் 

எள்ளில் தாமிரம், மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் (Molybdenum) ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. எள், ஆன்டிஆக்ஸிடன்ட்களை உருவாக்கி, முடக்கு வாதத்தையும் அதனால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும். எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் அடிப்படையாக அமையும் கொலாஜன் மற்றும் எலாஸ்டினை (Elastin) இணைக்கும் பணியை எள்ளிலுள்ள தாமிரம் செய்கிறது.