பச்சையாக முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வந்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
leg pain

சித்த மருத்துவத்தில் முடக்கத்தான் கீரைக்கென்று தனியிடமுண்டு ,நம்மை முடக்கிவிடாமல் ஆரோக்கியமாக இது வைத்திருக்கும் என்பதால் இதற்கு முடக்கத்தான் கீரை என்று பெயர் வந்தது .இந்த கீரை வாத நோய்களை குணப்படுத்தும் .மேலும் இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல், மூல நோய்கள், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகும் .இந்த கீரையை அரைச்சு சொறி சிரங்கு படை யுள்ள இடத்தில் பூசி வந்தால் குணமாகும் .மாதவிடாய் பிரச்சனை ,தலைவலி ,பொடுகு தொல்லை போன்ற தொல்லைகளுக்கு இந்த கீரை நல்ல பயன் தரும் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

1.சிலருக்கு இடுப்பு வலி போகவே போகாது ,இந்த இடுப்புப் பிடிப்பு, இடுப்புக் குடைச்சல், கை-கால் வலி, கை-கால் குடைச்சல் போன்றவற்றிற்கு முடக்கத்தான் கீரை மருந்தாக உதவுகின்றது.

2.சிலருக்கு காது வலி தொல்லை கொடுக்கும் .. இக்கீரையை வதக்கிப் பிழிந்து சாறை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட காதுவலி, காது குத்து, சீழ்வடிதல் முதலியன நீங்கும்.

3.சிலருக்கு மூல நோய் தொல்லை தரும் .இந்த மூல நோய்களுக்கும் இக்கீரை சிறந்த மருந்தாகும். பச்சையாக முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும்.