முடக்கத்தான் கீரை எந்த நோயை தடுக்கும் தெரியுமா ?
பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு ஆரோக்கியம் தர கூடியவை .அதிலும் அரை கீரை மலசிக்கலுக்கும் ,முருங்கை கீரை இரும்பு சத்துக்கும் ,முடக்கத்தான் கீரையை வாயு வாத வலிகளுக்கும் பயன் படுத்தலாம் .இந்த இந்த முடக்கத்தான் கீரை மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.இடுப்புப் பிடிப்பு, இடுப்புக் குடைச்சல், போன்ற நோய்களுக்கு முடக்கத்தான் கீரை மருந்தாக உதவுகின்றது.
2.. இந்த முடக்கத்தான் கீரையை வதக்கிப் பிழிந்து சாறை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட வேண்டும் .அப்போது காதுவலி, காது குத்து, சீழ்வடிதல் முதலியன நீங்கும்.
3..மேலும் பச்சையாக முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும்.
4.. முடக்கத்தான் கீரையை இடித்துப் பிரசவிக்கும் நிலையிலுள்ள பெண்ணின் அடிவயிற்றில் கட்டி வரலாம் ,
5.மேலும் முடக்கத்தான் இலையின் சாறை பூசி வரலாம் .இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு சிறிது நேரத்திற்குள் சுகப்பிரசவம் ஆகும்.
6.குழந்தை பெற்ற பெண்களுக்கு முடக்கத்தான் கீரையை நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்
7.குழந்தை பெற்ற பெண்களின் அடிவயித்துல இந்த கீரை பேஸ்டை பூசி வந்தால் கருப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
8.முடக்கத்தான் கீரை வாத வலிகளைச் சீர்செய்கின்றது.
9.இந்த முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் வாதவலி சரியாகும்.
10.கை-கால் வலி, கை-கால் குடைச்சல் போன்றவற்றிற்கு இந்த முடக்கத்தான் கீரை நல்ல மருந்து

