நீரில் பேக்கிங் சோடா சேர்த்து வாய் கொப்பளித்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
mouth ulcer

கேன்சர் சோர்ஸ் என்று மருத்துவத்துறையில் அழைக்கப்படும் வாய்ப்புண்கள் பல வகைப்படும் .சாதாரண வாய்ப்புண்கள் ஓரிரு நாட்களில் தானாகவே சரியாகிவிடும் .அடுத்து மேஜர் மவுத் அல்சர் குணமாக சில வாரங்கள் தேவைப்படும் .இது உண்டாக பல காரணங்கள் உள்ளது .அதில் போதிய அளவு தூங்காமல் இருந்தால் வாய்ப்புண் தோன்றும் என்று கண்டறியப்பட்டுள்ளது .

மேலும் எமோஷனல் ஸ்ட்ரெஸ் உடலில் இருந்தால் இந்த புண்கள் தோன்றும் .இன்னும் சிலருக்கு

வைட்டமின் சத்துக் குறைபாடு இருந்தால் இந்த வாய்ப்புண் தோன்ற வாய்ப்புள்ளது

மேலும் சிலருக்கு டீனேஜ் பருவத்தில், உடல் மாற்றத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக தோன்றலாம் .அதிக காரமான மசாலாக்கள் நிறைந்த உணவு வகைகளை உண்பதாலும் இந்த வாய்ப்புண்கள் தோன்றலாம் .சிலருக்கு திடீரென புகை பிடிப்பதை நிறுத்தினால் இது தோன்றும்

வாய்ப்புண்கள் (mouth ulcer)   தீர்வுகள்

1.சாதாரண வாய்ப்புண்கள் தானாகவே 8 முதல் 10 நாட்களுக்குள் சரியாகிவிடும்.

2.வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வருதல்,

3.வெதுவெதுப்பான நீரில் சமையல் சோடா (பேக்கிங் சோடா) சேர்த்து வாய் கொப்பளிப்பதன் மூலம் வலி குறையும் புண்கள் விரைவில் குணமடையும்.

4.ஆல்கஹால் இல்லாத வாய் கழுவும்  திரவம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

5.வாய்ப்புண்களுக்கு மணத்தக்காளி கீரை மிகுந்த பயனளிக்கக் கூடியது. மணத்தக்காளி கீரையை  பாசிப்பருப்பு, தேங்காய் போன்றவற்றுடன் சேர்த்து மசியல் செய்து சாப்பிடுவதன் மூலம் வாய்ப்புண்கள் விரைவில் ஆறும்.