வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் நொடி பொழுதில் கொசுக்களை விரட்டலாம்

 
Mosquito Bites

எல்லா பருவகால மாற்றங்களிலும் நம் வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வரும் கொசுக்கள் சுட்டெரிக்கும் கோடை காலத்திலும் வந்து இம்சிக்க தவறுவதில்லை. காலை முதல் மாலை வரை கடும் வெயிலில் அலைந்து, திரிந்து இரவு வீடு நுழையும் போது, சாவி இல்லாமலே நமக்கு முன் வீட்டினுள் நுழைந்து வீடு முழுவதையும் ஆக்கிரமித்து அலைந்து திரியும் கொசுக்களின் ரீங்காரம் நம்மை எரிச்சல் அடையை செய்யும்.

மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல அபாயகரமான நோய்களை நமக்கு பரப்பும் கொசுக்களை ஒழிக்க காயில், கொசுவர்த்தி, கொசு ஊதுவத்தி உள்ளிட்ட பலவற்றை நாம் பயன்படுத்தினாலும் அதன் பலன் சிலமணி நேரங்களே. பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து நம்மை உண்டு இல்லை என்றாகக்கிவிடும் கொசுக்கள். எனவே கொசுக்களை அண்டவிடாமல் எடுக்கும் நடவடிக்கைகளை நீங்கள் எச்சரிக்கையாக எடுக்க வேண்டும், அவற்றை சரியான வழியில் எதிர்த்துப் போராட வேண்டும். கொசுக்கள் வெறுக்கும் வாசனையை உங்கள் வீடு முழுவதும் பரப்புவதும் அவற்றை எதிர்க்க நல்ல வழி.

. வீடுகளில் ஒரு சில செடிகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்கள் நமது வீடுகளில் உருவாவது தடுக்கப்படுகிறது.

 

மாதிரி படம்

கொசுக்களை விரட்ட வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகள்:

1. பூண்டு செடி

பூண்டு செடி வளர்ப்பதனால் அதில் உள்ள அடர்த்தியான நறுமணத்தினால் கொசுக்கள் நமது வீட்டிற்கு வராமல் இருக்கும்.

2. துளசி செடி

துளசி செடியை வளர்ப்பதன் மூலமும் கொசுக்களை விரட்டலாம்.

3. புதினா செடி

புதினாச் செடியின் வாசனைக்கு கொசுக்கள் நமது வீட்டை நெருங்க வாய்ப்பே இல்லை. எனவே, புதினா செடியை வளர்க்கலாம்.

 4. லேவண்டர் செடி

லேவண்டர் செடியை அழகிற்காக அதிக இடங்களில் பயன்படுத்துவர். இந்த செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் இதில் உள்ள வாசனையில் கொசுக்கள் வீட்டிற்கு வராமல் இருக்கும்.

5. ரோஸ்மெரி செடி

ரோஸ்மெரி செடியில் நல்ல வாசனை மற்றும் அழகான பூக்களும் உள்ளன. இந்த வாசனை கொசுக்களின் எதிரி என்றே கூறலாம். எனவே, கொசுக்கள் வருவதைத் தவிர்க்கலாம்.

6. சாமந்தி பூ செடி

சாமந்தி பூவில் உள்ள வாசனைக்கு கொசுக்கள் வீட்டிற்கு வராது

7. கிராம்பு செடி

கிராம்பு செடியின் வாசனை கொசுக்களுக்கு ஆகாது. எனவே, இந்த கிராம்பு செடியை வீட்டில் வளர்த்தால் கொசுக்கள் வீட்டிற்கு வராது.