காலையில் சாப்பிடாமல் அவசரமா ஆபிஸ் போறவங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

 
idli

ஏற்கனவே சாப்பிட்ட உணவு செரித்து விட்ட பிறகு அடுத்த வேலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது தமிழ் மருத்துவம் .ஆனால் இரவு சாப்பிட்ட பிறகு கிட்டத்தட்ட 10 மணி நேரம் வயிறு காலியாக இருக்கிறது . .அடுத்து வேலை உணவுக்காக வயிற்றில் அமிலம் சுரந்து உணவுக்காக காத்திருக்கும் .இந்நிலையில் சிற்றுண்டி எடுக்காமல் இருந்தால் அந்த அமிலம் வயிற்றை அரிக்க தொடங்கும் .அப்போது சாப்பிடவில்லையெனில் அல்சர் போன்ற வயிற்று புண் ஏற்பட வாய்ப்புள்ளது .மேலும் உடலும் குடலும் ,மூளையும் சோரவடைந்து விடும் ,மேலும் மூளையில் நம் உற்சாகத்திற்கு காரணமான டோபமைன் போன்ற கெமிக்கல் சுரக்காமல் அனைவரிடமும் எரிந்து விழ வைக்கும்

vadai

காலை உணவு எடுத்து கொள்ளவில்லை என்றால் இரைப்பை காலியாக இருக்கும். இதனால் இரவில் இயல்பாக சுரந்துள்ள பித்தநீர் மெல்ல தலைக்கு ஏறும் அபாயம் உள்ளது. இதனால் தலைவலி, தலைசுற்றல் கண் எரிச்சல், வாந்தி போன்றவை ஏற்படும்.

), வயிற்று உப்புசம் (gastritis) என்று கூறப்படும் தீராத வலி மற்றும் வாந்தி, மயக்கம், ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகியவை காலை உணவு சாப்பிடாததால் ஏற்படுகிறது

உடலுக்கு தேவையான கலோரிகள் குறைந்து சோர்வு ஏற்படும், மேலும் உடலின் கலோரியும் குறைவதோடு உடலின் வளர்சிதை மாற்றத்தில் சிதைவை ஏற்படுத்தும்.