பாலில் தேன் கலந்து குடிச்சா ,நம் உடலுக்கு இவ்ளோ பாதுகாப்பா ?இது தெரியாம போச்சே

 
honey

தேன் சித்த மருத்துவத்தில் பயன்படும் ஒரு மருத்துவ குணமுள்ள பொருள் .பால் சிறந்த கால்சியம் நிறைந்த ஒரு பொருள் ஆகும் .

இந்த தேன் மற்றும் பால் ஒரு அற்புதமான உணவுக் கலவை. மிக முக்கியமாக பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் நம்முடைய மன அழுத்தத்தைக் குறைத்து மனதை அமைதியடையச் செய்யும். ஆரோக்கிய நன்மைகளோடு பால் கலந்த தேன் கலவை அற்புதமான சுவையை நமக்கு கொடுத்து பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது

honey

சிலர் இரவில் தூக்கமில்லாமல் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு தேன் கலந்த பால் கொடுத்து வரும் பொழுது அவர்களுக்கு நிம்மதியான இரவு தூக்கம் கிடைதுள்ளதற்கான ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது

இதய நோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 68 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அவர்களுக்கு 3 நாட்களுக்கு தினமும் இரண்டு முறை பால் மற்றும் தேன் கலந்த கலவை குடிப்பதற்கு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர்  அவர்களுக்கு அந்த கலவை நல்ல தூக்கத்தை கொடுத்துள்ளது.

 பாலுடன் தேன் கலந்த கலவையை நீங்கள் தொடர்ந்து குடித்து வரும் பொழுது அது எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்னும் அதிக நன்மையை கொடுத்து நம் எலும்புகளை பலப்படுத்தும் குணமுள்ளது என்று நிரூபிக்க பட்டுள்ளது

பாலை போலவே தேனில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என ஒரு ஆய்வு சொல்கிறது. மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது பால் மற்றும் தேன் கலந்த கலவை. மேலும் பால் ஹச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து நம்மை  இதய நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறத என்று பல மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது .