மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்க சோம்பை எப்படி எடுத்துக்கணும் தெரியுமா ?

 
stomach

நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு இயற்கை வைத்தியத்தில் நல்ல தீர்வு உள்ளது .நாம் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் நம் வீட்டு கிச்சனுக்குள் சென்றாலே பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் .அதிலும் சோம்பு பற்றி அது தரும் நன்மை பற்றி இந்த ப்பதிவில் பார்க்க போகிறோம்.நீண்ட நாள் பசியே எடுக்காமல் இருப்போருக்கும் நன்றாக பசியெடுக்க வைக்கும் ஆற்றல் சோம்புக்கு உண்டு .சோம்பு தண்ணீர் நம் உடலில் உள்ள யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி,  ரத்தத்தை சுத்த படுத்தும் .மேலும் டாக்சின்களை வெளியேற்றி நம் கிட்னியை ஆரோக்கியமாய் வைக்கும் ஆற்றல் சோம்புக்கு உண்டு ,மேலும் இது நம் மூளையில் உள்ள செல்களுக்கு புத்துணர்வு கொடுக்கும்.மேலும் இதன் நன்மைகளை பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம்  .

sombu

1.சிலருக்கு கண் பிரச்சினையிருக்கும் ,அவர்கள் சோம்பை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது கண்களுக்கு நன்மை பயக்கும்.

2.மேலும் சோம்பை சர்க்கரை மிட்டாய் சேர்த்து சாப்பிடுவது கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

3.சில பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினை தொடர்ந்து கொண்டேயிருக்கும் .இந்த மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருந்தால், சோம்பை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

4. பாலை சோம்புடன் கலந்து குடிப்பது மாதவிடாய் பிரச்சனையுள்ள பெண்களுக்கு நன்மை பயக்கும்.