எனக்கு படிச்சது மறக்காமலிருந்து,இப்ப மார்க் அதிகம் வாங்கறேன்னா அதுக்கு இந்த உணவுகள் தான் காரணம்
தற்போதைய காலங்களில் பலரும் ஞாபக மறதி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள் சிலவற்றையும் பார்க்கலாம்.
ஞாபக சக்தி குறைவாக இருப்பதற்கு காரணம், தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.
ஒரு வாரம் தொடர்ந்து காரட் சாப்பிட்டு வர மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பதுதான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்து மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தேவை.

ஞாபக சக்தி குறைய காரணங்கள்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்
தண்ணீர்
மீன்கள்
முட்டை
பூசணி விதைகள்
பால்
வல்லாரை கீரை
பாதம்
தேன்
மஞ்சள்
ஒலிவ் ஆயில்
ஞாபக சக்தி குறைய காரணங்கள்.
மூளை நரம்புகள் முதுமை அடைதல்.
மூளை நரம்புகள் வலுவிழத்தல்.
அதிக மனஅழுத்தம்.
ஆரோக்கியமற்ற உணவுகள்.
ஞாபக சக்தி குறைவதற்கு சரியான ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளாததும் ஒரு காரணம் ஆகும்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்
தண்ணீர்
மூளையில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் உள்ளது. இதனால் தண்ணீர் குடிக்கும் அளவு குறைந்தால் மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறையும். எனவே தினமும் போதியளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
மீன்கள்
மூளைக்கு omega-3 சத்து மிக அவசியம். omega-3 மூளையில் புதிய நரம்புகள் உருவாவதற்கும் மூளை சரியாக செயல்படுவதற்கும் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கும் மிக உதவியாக இருக்கின்றது.
முட்டை
முட்டையில் மூளையின் வளர்சிக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் பல இதர ஊட்ட சத்துக்கள் முட்டையில் நிறைந்துள்ளன.
மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கும் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கும் தவறாமல் தினமும் உணவில் முட்டை சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்.
பூசணி விதைகள்
பூசணி விதைகள் சக்தி வாய்ந்த ஆன்டி ஒக்ஸிட் இது நம் உடம்பில் உருவாக கூடிய நச்சுக் கழிவுகளை வெளியேற்றும்.
இந்த பூசணி விதைகள் சிந்திக்கும் திறனையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும் தன்மை கொண்டவை


