இந்த அறிகுறிகள் இருந்தா ,ஆண்களுக்கும் மார்பக புற்று நோய் வருமாம்

 
cancer

.

ப்ரெஸ்ட் கேன்சர் பெண்களுக்கு மட்டும்தான் வரும் என்ற கருத்தை சமீபத்தில் வந்த ஒரு புள்ளி விவரம் உடைத்துள்ளது .ஆம் நூறு பெண் கேன்சர் நோயாளிகளில் ஒரு ஆண் ப்ரெஸ்ட் கேன்சர் நோயாளி லண்டனில் கண்டறிப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

male

மார்பக புற்றுநோய் என்பது பொதுவாக பெண்களை மட்டுமே தாக்கும் நோயாக கருதப்பட்டு வரும் நிலையில், இங்கிலாந்தில்  ஒவ்வொரு ஆண்டும் சுமார்பல நூறு ஆண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண் மார்பக புற்றுநோய் அறிகுறிகளில் மிகவும் முக்கியமானது என்று பின்வருபவற்றை வரிசை படுத்தப்பட்டுள்ளது

1.மார்பகத்தில்  கட்டி - இவை பொதுவாக கடினமானது, வலியற்றது மற்றும் மார்பகத்திற்குள் நகராது

2.முலைக்காம்பு உள்நோக்கி திரும்புதல்.

3.முலைக்காம்பிலிருந்து திரவம் வெளியேறுதல்.

4.முலைக்காம்பைச் சுற்றி புண் அல்லது அறிப்பு முலைக்காம்பு அல்லது சுற்றியுள்ள தோல் கடினமாக, சிவப்பு அல்லது வீக்கமாக மாறுதல்.

5.அக்குளில் சிறிய புடைப்புகள் ஏற்படுதல்.

ஆண்களை தாக்கும் மார்பக கேன்சரால் உண்டாகும் பாதிப்புகள் என்னென்ன?

 

ஆண்களுக்கு உண்டாகும் ப்ரெஸ்ட் கேன்சரால் புரோஸ்டேட் புற்றுநோய் உண்டாகும்  வாய்ப்பு பல மடங்கு அதிகரிப்பதாக அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன

ஆண் மார்பக புற்றுநோயைக் கண்டறிதல்:

மார்பக புற்று நோய்க்கான பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன்கள் ஆகியற்றை கொண்டு கண்டறிதல்.

மார்பக புற்றுநோய்க்கான தெளிவான குடும்ப வரலாறு இருந்தால் மரபணு நிபுணரிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ளுதல்.மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் அலட்சிய படுத்தாமல் உடனடி சிகிச்சை மேற்கொள்ளுங்கள்