மதிய வேளையில் மைதா உணவை சாப்பிடுவோருக்கு நேரும் விபரீதம்

 
parotta

 

பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகள்தாம் நம்மக்கு என்ன நோய் எதிர்காலத்தில் ஏற்படும் என்பதை தீர்மானிக்கும் .அதனால் ஆரோக்கியமான உணவு வகைகளை உண்டால் ஆரோக்கியமாய் வாழலாம் .எந்த உணவுகளை மதியம்  தவிர்த்தல் நம் உடலுக்கு நல்லது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

Parotta

 

1.சிலர் எந்நேரமும் மைதா உணவுகள் அதிகம் சாப்பிடுவர் .மைதாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நாண் போன்றவற்றை மதியம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

2.மேலும் சிலர் ஆயிலில் பொறித்த உருளை கிழங்கை அதிகம் சாப்பிடுவர் .இந்த எண்ணெய்யில் பொரித்த உருளைக்கிழங்கு போன்றவற்றை மதியம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

3.சிலர் பஜ்ஜி மதியம் சாப்பிடுவர் ,இது  போன்றவற்றையும் மதிய உணவில் எடுத்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள்.

4.மேலும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையால் செய்யப்பட்ட இனிப்புகள் கொழுப்பு நிறைந்தவை.

5.இது போன்ற வெள்ளை சர்க்கரையால் செய்த இனிப்பு உணவுகளை மதிய உணவாக எடுத்து கொள்ள வேண்டாம்.

6.மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சிலர் அதிகம் சாப்பிடுவர் ,இதை உட்கொள்வதால், சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளே செல்ல வாய்ப்புள்ளது.

7.மேலும் மதிய உணவிற்கு பர்கர்கள்  எல்லாம் மிகவும் மோசமான உணவுகள் ஆகும்.

8.மேலும் சிலர் மதிய உணவில் பானிபூரி, சாப்பிடுவது உண்டு .இதுவும் மோசமான உணவு ஆகும்

9.மேலும் சிலர் மதிய உணவில் சமோசா சாப்பிடுவர் ,இதுவும் உடலினை கெடுக்கும் உணவு ஆகும்

10.மேலும் சிலர் மதிய உணவில் பீட்சாக்கள் சாப்பிடுவர் .இதுவும் உடல் நலத்திற்கு கேடு உண்டாக்கும்