மாதுளம் பூவை கஷாயம் செய்து குடித்தால் எந்த நோய்கள் காண்டாகும் தெரியுமா ?

பொதுவாக மாதுளம் பூவில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது ,அந்த பூ மூலம் எந்தெந்த நோய்களை வெல்லலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1. சிலருக்கு ரத்தத்தில் நச்சுக் கழிவுகள் இருக்கும் ,அவர்கள் மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி அதனை
பொடியாக்கி கொள்ள வேண்டும் .பின்னர் அதை கஷாயம் செய்து தினமும் காலை,
மாலை 2 வேளையும் அருந்தி வர வேண்டும் .இப்படி குடித்து வந்தால் இரத்தம்
சுத்தமடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும்
2.அது மட்டுமல்லாமல் காலையில் நான்கு மாதுளம் பூவை எடுத்து கொள்ள வேண்டும்
பின்னர் அந்த பூவை சாப்பிட்டு விட வேண்டும் ,அதன் பின்னர் சிறிது பால் குடிக்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து 45 நாட்கள் உட்கொண்டு வந்தால் ரத்தம் சுத்தமடைந்து புத்துணர்வு கிடைக்கும்
3. சிலரின் உடல் பலவீனமாக இருக்கும் .அவர்களின் உடல் நன்கு பலப்பட மாதுளம் பூவை நிழலில்
உலர்த்தி தூளாக்கி கொள்ள வேண்டும் .பின்னர் அதனுடன் தேன் கலந்து எடுத்து கொள்ள வேண்டும்
இப்போது அந்த கலவையை சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடைந்து நல்ல பலசாலியாகி விடலாம்
4. சில பெண்களின் கருப்பை பலவீனமாக இருக்கும் ,அந்த பெண்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து
எடுத்து கொள்ள வேண்டும் .இதை காலை வேளையில் அருந்திவர வேண்டும் .இப்படி குடித்து வந்தால் கருப்பை பலப்படும்
5.. சிலருக்கு அஜீரணக் கோளாறு இருக்கும் .இப்படி கோளாறு ஏற்பட்டு உள்ளவர்கள் அதனால் வாயு
தொல்லை உடையவர்கள் மாதுளம் பூவை எடுத்து கொள்ள வேண்டும்
அந்த பூவை கஷாயம் செய்து அருந்துவது ஆரோக்கியம் தரும்
6.. சில ஆண்களின் தாது விருத்தியடைய இந்த மாதுளம் பூவில் சிகிச்சை உண்டு ,அந்த ஆண்களுக்கு மாதுளை பூவை காயவைத்து எடுத்து கொள்வோம்
பின்னர் அதை பொடி செய்து எடுத்து கொள்வோம் .அதனுடன் அருகம்புல் பொடி
கலந்து கொண்டு தேனில் குழைத்து ஒரு மண்டலம்
அருந்தி வந்தால் தாது விருத்தியடைந்து குழந்தை பேறு உண்டாகும்