நூறு வருஷம் நுரையீரல் சுவாசிக்க சூப்பர் வழிகள்

 
lungs

இந்த உலகில் நுரைஈரல் பிரச்சினையில் சிக்கி அவதிப்படுவோர் எண்ணற்ற கணக்கில் இருக்கின்றனர் .அதுவும் சிகெரெட் பிடிக்காமல் ,சுற்று சூழல் மாசு காரணமாக அவர்களின் நுரையீரல் பாதிக்கப்பட்டு பலர் அவதிப்பட்டு வருகின்றனர் .மேலும் நுரையீரல் அழற்சி ,ஆஸ்த்துமா போன்ற பிரச்சினை கொண்டவர்களும் தங்களின் நுரையீரலை சுத்த படுத்த நிறைய வழிகள் உள்ளன .அந்த வழி பற்றி இந்த பதிவில் காணலாம்

Lung

 72 மணிநேரத்தில் அதாவது 3 நாட்களில் நுரையீரலில் உள்ள பெரும்பாலான நச்சுக்களை வெளியேற்றும் சில வழிமுறைகள் உள்ளன. இப்போது அவற்றை பார்ப்போம். |

நுரையீரலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள் என்றால், முதலில் பால் பொருட்களை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

நுரையீரல் சுத்திகரிப்பின் முதல் நாளில் இரவு தூங்கும் முன் ஒரு கப் மூலிகை டீ குடிக்க வேண்டும். இது இரைப்பைக் குடல் பாதையில் மலச்சிக்கலை உண்டாக்கும் டாக்ஸின்கள் மற்றும் பிற நச்சுக்கள் அனைத்தையும் வெளியிடச் செய்து குடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் .

நுரையீரலை சுத்தம் செய்ய 300 மிலி கிரேப்ஃபுரூட் ஜூஸ் அல்லது அன்னாசி ஜூஸ் குடிக்க வேண்டும். இந்த இரண்டு ஜூஸ்களிலுமே இயற்கை ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைய உள்ளன.

நுரையீரலை சுத்தம் செய்ய காலை உணவு மற்றும் மதிய உணவுகளுக்கு இடையே 300 மிலி கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும். இந்த ஜூஸ் நுரையீரல் சுத்திகரிப்பின் போது இரத்தத்தை காரமாக்க உதவுகிறது.

நுரையீரலை சுத்தம் செய்ய மதிய வேளையில் 400 மிலி பொட்டாசியம் அதிகம் நிறைந்த ஜூஸ் குடிக்க வேண்டும். ஏனெனில் பொட்டாசியமானது ஒரு சிறந்த கிளென்சிங் டானிக் போன்ற செயல்படுகிறது.

இரவு தூங்கும் முன் 400 மிலி கிரான்பெர்ரி ஜூஸ் குடிக்க வேண்டும். இது நுரையீரலில் தொற்றுக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகிறதுஎன்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் .